உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பன் செப்டம்பர் 19 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
வியர்வை வாசனையைத் திரவம் மூலம் உருவாக்கி கொசுக்களைக் கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை சென்னை பெரம்பூர் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கம்போடிய நாட்டின் பிரதமராக ஹன்சென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பாக சேவை செய்தவருக்கான ஜோர்டான் ராணி ரனியா விருதும், இங்கிலாந்தின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் மனிதநேயப் பணிகளுக்கான பீட்டர் ஜே ஹோம்ஸ் விருதும் மலாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒரே செடியில் தக்காளியும் உருளைக்கிழங்கும் விளைய வைத்து பிரிட்டனைச் சேர்ந்த தாம்சன் அன்டு மார்கன் நிறுவனம் சாதனை செய்துள்ளது.
குடிநீரைச் சுத்தப்படுத்தும் வாழைநார் பிரிப்பான் கருவியை (200 ரூபாய் செலவில்) தூத்துக்குடி அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
எந்திர (ரோபாட்) மனிதனைப் போல தன்னிச்சையாகச் செயல்படும் மூளையை அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.