அறிவைத் தானாக வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், குணத்தை மக்களோடு பழகித்தான் அடைய வேண்டும்.
உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
கடிந்து கொண்டபின் தட்டிக் கொடுப்பது மழை நின்றபின் வரும் வெயில்போல் இதமானது.
சென்றதை மறப்பது, நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது, வருங்காலம்பற்றிச் சிந்திப்பது.
நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.
அன்புடன், கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.
அசைக்க முடியாத உறுதியும் திடசித்தமும் கொண்டவன் உலகத்தைத் தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்வான்.
உலகில் சாகாவரம் பெற்றவை என்று ஒன்றைத்தான் சொல்லமுடியும். அவை புத்தகங்களே. \ கதே
தனிமரம் தோப்பாகாது. ஆனால், அது தோப்பாவதற்குத் துணைபுரிகிறது.
சிரித்து மகிழ்ச்சியாக வாழும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். மனோதைரியத்தை இழந்துவிட்டால் எல்லாவற்றையும் இழந்தவரே.
இது முடியும், இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை.
பணம் தேடுவது முட்டாளுக்கும் முடியும். அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும்.
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது. ஆனால், எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
குணம் என்பது ஒரு கண்ணாடி. தங்களின் உண்மையான உருவத்தை ஒவ்வொருவரும் அதில் பார்த்துக் கொள்ளலாம்.
எதைக் கண்டு ஒரு மனிதனுக்குச் சிரிப்பு வருகிறது என்று கவனி. அவன் எப்படிப்பட்டவன் என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.
முயற்சி கானல் நீரல்ல; நிச்சயமாக அது ஆற்றங்கரைக்கே அழைத்துச் செல்லும்.
உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்லப் பயந்து கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதனைக் கடந்து செல்கிறோம்.
இன்ப வாழ்விற்கு இலக்கணமாக நாள்தோறும் ஒரு பாட்டைக் கேள். நல்ல கவிதை படி. அழகிய ஓவியத்தைப் பார். முடியுமானால் அறிவு நிரம்பிய சில சொற்களைப் பேசு.
உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்லப் பயந்து கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதனைக் கடந்து செல்கிறோம்.