திரவுபதியைக் காப்பாற்ற கிருஷ்ணர் வந்தார் என்பது புராண காலம். இப்போதும் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்று எண்ணும் அளவுக்கு நம்மிடம் பயமோ, பக்தியோ இல்லை. அதனால் பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம்.
– பா.ஜ.க முன்னாள் எம்பி, நடிகை ஹேமாமாலினி, புனேயில் அளித்த பேட்டியில்…
பயமும் பக்தியும் இருந்தால் மட்டும்தான் கிருஷ்ணன் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் அந்த வெண்ணை திருடிக் கண்ணன் கடவுளா? மனிதனா? பக்தன் எப்படி இருந்தாலும் அவனைக் காப்பாற்ற வேண்டியது கடவுளின் கடமை இல்லையா? புராண கால திரவுபதிக்குப் பிறகு ஒருவருக்குக் கூடவா கிருஷ்ணனிடம் பயமும் பக்தியும் இல்லாமல் போய்விட்டது? பிரதிபலனை எதிர்பார்ப்பவன் கடவுளாக இருக்கமுடியுமா? `கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர்ர்ர்ர்ர்…கூறியிருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைவோரே… ஊருக்குத்தான் உபதேசமா? தான் சொன்னதை தானே கடைப்பிடிக்கமாட்டானா கிருஷ்ணன்? – பெரியாரிடி