மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?

செப்டம்பர் 16-30

கருத்தொற்றுமை  கொண்ட வள்ளுவரும்  இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக்  கிறிஸ்துவுக்கும் பொருத்துவதுண்டு.  ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிறிஸ்து முந்தியா?  என்பதில் நான் கிறிஸ்து  முந்தின்னு சொன்னால்   கொஞ்சம் தகராறு வரும்.  ஆனால்  அவர் வெகு தூரத்திலே 5000,  6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர். இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி  அடிச்சிருக்க மாட்டாங்க _ வைச்சிக்கங்க,  ஆனாலும் கருத்து ஒன்னாயிருக்கும்.  நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ரொம்பச் சரி. இவர்போல்தான் சொல்லியிருக்கிறார் கிறிஸ்து. இந்தக் (வலது) கன்னத்தில் அறைந்தால், இந்தக் (இடது) கன்னத்தையும் காட்டு என்று! மேல்சொக்காயைப் பிடுங்கினால் அடிச்  சொக்காயையும் கழட்டிக்  கொடுன்னார்! (சிரிப்பு) சரி ரொம்ப -அன்புக்கும் அது சரி. ரொம்ப ஆழ்ந்த  ஞானத்துக்கும் அது இருக்குது.  அது இன்னைக்கு முடியுமோ? இந்தக் கன்னத்தில்  அறைஞ்சதும் நீ மறு கன்னத்தையும்  காட்டினால்  வாயில் உள்ள முப்பத்திரண்டு பல்லும் போயிடும் (சிரிப்பு).  வெறும் ஆளாய்த்தான் போய்ச் சேருவான்,  கொஞ்சம்  எதிர்த்தால்தான் முடியும். இன்றைக்கு  அப்படி வேண்டியிருக்குது.  அவர்கள் அப்பொழுது அப்படி இருந்தார்கள், அவர்கள் பயித்தியக்காரர்கள் அல்ல. அன்றைய காலம் அப்படி இருந்திருக்கும். ஒரு சமயம்  அது போலவே நம்ம  இலக்கியங்களிலே அனேக சங்கதிகள் இருக்கு.  அதை சுவாமிகளும் சொல்லியிருக்கிறாங்க.  அதை  நம்புகிறோமோ  இல்லையோ  அது மாதிரி நடந்ததோ,  இல்லையோ  அதிலே இருக்கிற கருத்துகள் ரொம்பச் சரி,  சிலது அப்படியே  இருக்குது.

 


 

வாழ்த்து?

எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை.  அது ஒரு மூடநம்பிக்கை. என்னை வையிரான் பாருங்க. அவன் நாசமாயப் போகமாட்டானான்னு அதுவும் ஒரு மூடநம்பிக்கைதானே.  உடனே நான் நாசமாய்ப் போயிடுவேனா நான்.  ஆனதினாலே எல்லா மூடநம்பிக்கை போல வாழ்த்தும் _- ஒரு மூடநம்பிக்கை.  ஆனாலும் அது ஒரு செல்வாக்குப் பெற்றிருக்கிறதினாலே,  அது காதுக்கு இனிமை கொடுக்கிறது.  அது என்னா செய்கிறதுன்னா?  வாழ்த்துகிறபோது அது இனிமையைக் கொடுக்கிறது.  வைகிறபோது கொஞ்சம் துன்பத்தைக் கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *