- அரசு ஊழியர்கள் இணையதளம் (இ.மெயில்) மூலம் மட்டுமே தகவல் பரிமாறிக் கொள்ள வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- வங்காள தேச உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நஸ்முன் அரா சுல்தானா நியமிக்கப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவரும் இவரே.
- நிலவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவகையில் 1 கி.மீ. நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திராயன் கண்டுபிடித்துள்ளது.
- புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட முடியாது என்று தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க கட்டணமின்றிப் பேசுவதற்கான தொலைபேசி எண் 1965.
- அரவாணிகள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினமாகக் கடைப்பிடிக் கப்படும் என்று முதல் அமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
- ஆணாக இருந்து பெண்ணாக மாறி 2007 இல் நடைபெற்ற அழகிப்போட்டியில் முதலிடம் பெற்ற தன்யரத் தாய்லாந்து தனியார் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார்.
- தமிழக சிறைகளில் கைதிகள் பேசுவதற்காக பொது தொலைபேசி வசதி ஏற்படுத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
- தனி தெலுங்கானா மாநிலக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்வோம் என்று தெலுங்கானா பிராந்திய காங்கிரஸ் எம்.பிக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
- லிபியா அதிபர் கடாபி மற்றும் அவரது குடும்பத்தினரின் சுவிட்சர்லாந்து நாட்டின் சொத்துக்களை அந்நாட்டு அரசாங்கம் முடக்கியுள்ளது.
- மாற்றுத் திறனாளிகள் தற்போது இருக்கும் பதிவுச்சான்றிலேயே வாகனவகை மாற்றம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதள முகவரிகள் http://ecimain/Electoral Laws/compendium/vol3/pdf மற்றும் http://eci.nic.in/ecimain/fagmacc.pdf.
- பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான பொதுச்சாளர முறைக்கு (கவுன்சிலிங்) விண்ணப்பங்கள் மே 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனே விண்ணப்பித்து, 4 நாள்களுக்குள் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- கலிபோர்னியாவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் அந்தோணி அடால்டா என்ற மருத்துவ நிபுணர் திசுக்கள் மூலம் செயற்கை சிறுநீரகத்தினைத் தயாரித்து, நோயாளிக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.