தந்தை பெரியார் பேசுகிறார்…

செப்டம்பர் 16-30

நாசவேலைக்காரன்

அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் புரட்சிக்காரனும், சகல துறையிலும் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் ஜாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை, வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன்; நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு, மத அடிப்படை என்பவைகளைக்கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன். இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.

 

 


 

எனது பள்ளிப் படிப்பு

நானும் படிக்கலே. என்னுடைய 10ஆவது வயசிலே நாலாவது வகுப்பு பாஸ் பண்ணினவன்.  அதுவும் இரண்டு வருஷம் படிச்சி முதல் வருஷம் பெயிலாகி, அடுத்த வருஷம் பாஸ் பண்ணினேன். 1888, 1889லே. எனக்கு ஞாபகமிருக்குது.  என் 10ஆவது வயதிலே.  அதற்கப்புறம் நானு எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் படிக்கலே. எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லே பெரியவங்க நம்பிக்கையில்லே.

எனக்கு இரண்டாவது நாட்டைப் பற்றிக் கவலை இல்லை.  மொழியைப் பற்றிக் கவலை இல்லை.  நம்ம நாட்டை எவன் அரசாளுகிறான் என்பதைப் பற்றியும் கவலையில்லை.  அதனாலே இஷ்டம் போல என்னாலே பேச முடிஞ்சிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *