பதிவுகள்

மார்ச் 16-31
  • தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 21 இல் தடை விதித்துள்ளது.
  • பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப்பிற்கு மும்பை தனி நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி பிப்ரவரி 21 இல் தீர்ப்பளித்துள்ளது.
  • 9 ஆண்டுகளுக்குப்பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று சபர்மதி சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 22 இல் தீர்ப்பு வழங்கி, 11 பேருக்கு மரணதண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மார்ச் 1-இல் ஆணையிட்டுள்ளது.
  • கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிப்பதை தனியார் பள்ளிகள் எதிர்க்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 24 இல் ஆணையிட்டுள்ளது..
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் சோதனை நடத்தி அதன் அறிக்கையை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 25 இல் ஆணையிட்டுள்ளது..
  • ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவசர சிகிச்சையளிக்கும் பச்சிளம் குழந்தை உயிர் காக்கும் திட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் பிப்ரவரி 26 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் மார்ச் 1 இல் அறிவித்துள்ளது.
  • பாகிஸ்தானில் அமலில் உள்ள மத துவேஷ சட்டத்துக்கு எதிராகப் பேசிவந்த சிறுபான்மை மக்கள் நலத்துறை மந்திரி ஷபாஸ் பட்டி தலீபான் தீவிரவாதிகளால் மார்ச் 2 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் மார்ச் 3 இல் ரத்து செய்ததால் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 3 இல் மறுத்துவிட்டது.
  • எகிப்து பிரதமர் அகமது ஷபீக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மார்ச் 3 இல் அந்நாட்டின் ராணுவ உயர்மட்டக் குழு தெரிவித்ததோடு, முன்னால் போக்குவரத்துத்துறை அமைச்சரான எஸ்.எம் ஷரப் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
  • மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜூன் சிங் மார்ச் 4 இல் மரணமடைந்தார்.
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு நோட்டீசு அனுப்ப உச்ச நீதிமன்றம் மார்ச் 4 இல் உத்தரவிட்டுள்ளது.
  • பூமியைக் கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கைக்கோள் மார்ச் 4 இல் பசிபிக் கடலில் விழுந்தது.
  • எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழி மறித்துத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனை ஒரிசா மாநிலம் பலசோர் கடற்கரைப் பகுதியில் மார்ச் 6 இல் வெற்றிகரமாக நடந்துள்ளது.
  • 37 வருடங்களாக கோமாவில் இருக்கும் செவிலி (நர்ஸ்) அருணாவின் கருணைக் கொலைக்கு அனுமதி தரமுடியாது என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 7 இல் தீர்ப்புக் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *