அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சுடன் ஓர் உரையாடல்!
அண்மையில் பூமியின் பெரிய காட்சி (The Greater show on earth) என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டுள்ள ரிச்சர்ட் டாகின்சின் புத்தகம், தோற்ற வளர்ச்சி என்பது உண்மையானது, என்ற கருத்துகளைக் கொண்டுள்ளது. Spiegel Online என்ற ஊடகத்திற்காக மதத்தின் குறைபாடுகள், உண்மையின் பெருந்தோற்றம், கடவுளின் துகள் போன்றவற்றைப் பற்றி ரிச்சர்ட் டாக்கின்சுடன் நடத்திய உரையாடலில் இருந்து…:
கேள்வி: பேராசிரியர் டாகின்ஸ் அவர்களே, உங்களது புத்தகம், பூமியின் பெரிய காட்சி, தோற்றத்திற்கான சான்று அண்மையில்தான் ஜெர்மன் மொழியில் வெளியாகியுள்ளது. ஜெர்மன் தலைப்பு, தோற்றுவித்தலின் பொய்; டார்வின் சொல்வது ஏன் சரி? என்று இருக்கிறது. உங்களுக்கு அது திருப்திதானா?
பதில்: முழுவதுமாக இல்லை. ஏனென்றால், அது மறுப்பளிக்கும் திசையை நோக்கிப் பயணிக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள தலைப்பு நம்பிக்கையூட்டக்கூடிய ஒன்று. அது உயர்த்தக் கூடியதாகவும், உற்சாகமூட்டக் கூடியதாகவும், வாழ்க்கையின் அழகை அனுபவிப்பதற்கும் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான அழகையும் கொண்டு உள்ளது. ஜெர்மன் மொழியில் தலைப்பே ஆபத்தானதாகவும் ஒருவிதமான மோதலைக் கொண்டதாகவும் உள்ளது. அது அந்தப் புத்தகத்தில் உள்ளது; ஆனால், தலைப்பு வேறுவிதமான அழுத்தத்தைக் கொடுப்பதை நீங்கள் காணலாம்..
கேள்வி: இந்தப் புத்தகத்தில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய, கிட்டத்தட்ட இளமைக் கனவுகளைக் கொண்ட வாழ்க்கைத் தோற்றம் கொண்ட அழகியலை அது விளக்கக்கூடியது. ஆனால் அதற்கு மாறுபட்ட மறுபக்கமும் உண்டு. அது குறிப்பாக அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும், உற்சாகமூட்டக்கூடிய ஒரு முயற்சியாகும். அவர்கள் வகுத்துக் கொண்டபடி, வாழ்க்கை விளக்கப்பட வேண்டிய ஒன்றாக, அடிப்படை மதங்களினால் உந்தப்பட்டுள்ளனர்.
நான் அதை, ஒரு சோம்பேறித்தனமான ஒன்றுக்கும் உதவாத விளக்கம் என்றும், உண்மையில்லாத ஒன்று என்றும் கருதுகிறேன்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதாவது, மதம் தொடர்பான காலகட்டத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
பதில்: குழந்தையாயிருக்கும்போது; குழந்தையிலிருந்துதானே நான் வளர்ந்திருக்கிறேன்?
கேள்வி: நாம் வளர்ந்து பருவத்தை அடையும்போது, புறந்தள்ளி நாம் முன்னேற வேண்டிய ஒன்றுதான் மதம் என்று நினைக்கிறீர்களா?
பதில்: புனிதர் பால் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தையாக இருந்தபோது, நான் ஒரு குழந்தை எதைப் பேசுமோ அதைத்தான் பேசினேன். நானே மனிதனாக வளர்ந்த பிறகு, குழந்தைத்தனத்தை விட்டுவிட்டேன்.
கேள்வி: அமெரிக்க மரபணு இயலாளர் (ஜெனிசிடிஸ்ட்) டீன் ஹாமர், கடவுளின் மரபணு பற்றிய சாத்தியக் கூறுகளைக் கூறியவர், மனிதர்கள் பொதுவாக மத நம்பிக்கைகளுடன் நன்கு பிணைக்கப்பட்டவர்கள் என்றார்…
பதில்: நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாம் உளவியல் செயல்பாட்டிற்காக, பல முன்கூட்டிய மரபணுக் கருத்துகளைக் கொண்டிருக்கிறோம். அவை மதத்திற்குப் பலமூட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பயனளிப்பதாக உள்ள முன்கூட்டிய முடிவுகள் அதிகாரத்திற்கு உட்பட்டவைகளாக உள்ள நிலைமைகளைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அல்லது முன்கூட்டிய முடிவுகள் சாவைப் பற்றி அஞ்சுவதற்கோ, அல்லது ஒரு பெற்றோரது உருவத்தைக் கண்டு அஞ்சுவதற்கோ உதவியாக இருக்கலாம். இவை எல்லாம் தனித்த உளவியல் முன்கூட்டிய முடிவுகள்; சரியான பண்பாட்டுச் சூழலில் இவை ஒருவரை மதத்தில் கொண்டு போய்த் தள்ளுவதில் முடியும்; அவை பண்பாட்டு வளர்ப்பு முறையின்படி எந்த ஒரு மதமானாலும் இருக்கலாம். அதை ஒரு கடவுளின் மரபணு என்று நான் கூறமாட்டேன்.
கேள்வி: ஒரு பரிமாண உணர்வின்படி, மதம் மிகவும் வெற்றி பெற்றிருக்கிறது. இது சரியா?
பதில்: மனித சமுதாயம் மதத்தின் சில போட்டிகளால், ஓரளவு பலம் பெற்றுள்ளது என்ற எண்ணம் ஓரளவில் உண்மைதான்!
கேள்வி: ஆனால், ஒரு மதம், உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை வளர்த்தெடுக்காத ஒரு மதத்தைச் சார்ந்திருப்பதென்பது பரிணாமத் தர்க்கரீதியாக முரண்பாடாகத் தெரிவது பற்றி…
பதில்: ஆம். மரபணுக்கள் வாழ்வதற்கான போட்டிகள், போராட்டங்கள் எவ்வளவோ உள்ளன. அவை நமக்குப் பழக்கமானவைதான். சில சமயங்களில் அவை ஒரே மாதிரியாகவும், பல சமயங்களில் வேறுபட்டும் நிற்கின்றன. கேள்வி: எப்பொழுதுமே மதம் வேகமாக அடக்கும் குணம் படைத்ததல்ல. அதன் ஒரு பக்கம் மிருதுவானதுதான். உங்கள் கருத்தை வலியுறுத்த, உங்கள் புத்தகத்தில் ஒரு பாதிரியாரை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். பதில்: த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் என்ற நூல், உண்டாக்கும் திறனுக்கு எதிரானதுதான். ஆகவே ஒரு பொதுக்காரணத்துக்காக, ஒத்த கருத்துக் கொண்ட பாதிரியாருடன் ஒரு நல்ல காரணத்திற்காக சேருவதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அது அவருடைய மதத்துக்குக் கெட்ட பெயர் சேர்க்கிறது. ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தற்காலிக ஏற்பாடு செய்து கொள்வதுபற்றி நான் கவலைப்படவில்லை.
கேள்வி: ஓர் உண்மையான உருவாக்கம் செய்பவர் உங்கள் புதிய புத்தகத்தைப் படிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பரிணாம வளர்ச்சி என்பது உண்மையான ஒன்று என்று உங்கள் வழக்கமான புத்தக ரசிகர்களுக்குச் சமாதானம் செய்யத் தேவையில்லை. அப்படியிருக்கும்போது, யாருக்காக நீங்கள் த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்அய் எழுதினீர்கள்?
பதில்: பெரும்பாலும், வேலியில் உட்கார்ந்திருக்கும் மக்களுக்காக. அது பரிணாம வளர்ச்சிக்கான சான்றாகக் கருதப்படுகிறது. தீவிர அடிப்படைவாதிகளின் மனதை மாற்ற முடியும் என்று நான் பெரிதும் கருதவில்லை. எவ்வழியிலும் அவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களாக இருப்பார்களென்று நான் உண்மையாகவே நம்புகிறேன். தங்கள் மனது மாற்றப்பட வேண்டும் என்று நினைக்காதவர்கள் வேலி உச்சியிலிருந்து ஒரு நாள் எந்தப் பக்கமாவது விழத்தான் செய்வார்கள். ஏனென்றால், அதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.
கேள்வி: உங்கள் புத்தகத்தில் உள்ள கடுமையான வார்த்தைகளால், சிலர் வேறுபட்டுப் போவார்கள் என்று நீங்கள் அஞ்சவில்லையா?
பதில்: எதைக் கடுமையான வாசகம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
கேள்வி: நீங்கள் உங்கள் எதிரிகளை அழிவை மறுப்பவர்கள் என்றும், அறியாதவர்கள் என்றும், கேலிக்குரியவர்கள் என்றும், முரண்பட்ட வேறுபாடுகளைக் கொண்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறீர்கள்.
பதில்: என்னுடைய சந்தேகம் என்னவென்றால், அதிகமான மக்கள் அதைச் சிரிப்பூட்டுவதாகவே காண்பார்கள். ஏதாவது ஒரு ஆசிரியரின் நூலைப் படிக்கும்போது, ஒரு முட்டாளை அவர் கேலி செய்யும்போது நானே சிரித்து விடுகிறேன். சிலரைப் பற்றிய விவரங்கள், பக்கங்கள் புரட்டப்படும்போது அவர்களை நான் இழந்துவிடக் கூடும். ஆனால், சிரிப்புக்குரியவர்களைவிட அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடும்.
கேள்வி: உங்கள் புத்தகத்தில், கணக்கில் உள்ள தோற்றம் (Theorem) போல, நீங்கள் பரிணாம வளர்ச்சியும் அதே அளவில் உள்ளது என்று கூறுகிறீர்கள். உங்கள் எதிரிகள் சொல்லுவதைப்போல, மத அடிப்படைவாதிகளைப்போல நீங்கள் கருத்துத் திணிப்பில் அக்கறை கொண்டு இல்லையா?
பதில்: உலகம் தட்டையானது என்று உலகம் நம்பிய காலம் ஒன்று உண்டு. பிறகு சூரியன்தான் உலகத்தின் மய்யம் என்ற அய்ய நிலை இருந்தது. பிறகு சூரியன் உலகத்தின் மய்யம் இல்லை என்ற உறுதிப்படுத்தப்படாத கருத்தும் நிலவியது. சாதாரண மொழியில் சொல்வதென்றால் உண்மை (‘fact’) என்ற சொல்லின்படி, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
சூரியன் கோள் குடும்பத்தின் பால்வீதியில் உள்ள ஒரு பகுதி. இவைகளில் எவையுமே மாற்றம் அடையாத ஓர் உண்மையாக, இருக்கணும் என்ற நிலை மாறி உண்மை நிலைக்கு வர இயலாது. பிறகு நீங்கள் ஏதோ ஒன்று உண்மையாகி விட்டது என்பதை உங்கள் பின்புத்தியால் உணர்வீர்கள். அறிவியல் மேதைகள் ஒன்றுமில்லாமை ஒருபொழுதும் உண்மையாகாது என்றும், ஒவ்வொன்றும் ஓர் அனுமானம் என்றும், அவைகளைச் சரிவர நிரூபிக்க முடியாதென்றும், அவை ஒருநாள் திடீரென்று விழித்து எழுந்து ஒரு கனவு என்று கண்டுபிடித்துவிடும். ஆனால், பொதுமக்கள் உண்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வரையிலும் பரிணாம வளர்ச்சியும் இருக்கும்.
கேள்வி: பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்து இன்னமும் மாற்றத்துக்கு உரியதுதானா?
பதில்: ஆம்! அப்படித்தான்! உண்மையில் அது விவாதத்துக்குரியதுதான். உதாரணத்துக்கு, எந்த அளவிற்கான பரிணாம வளர்ச்சி இயற்கையின் தேடுதலால் விளைந்தவை; எந்த அளவு ஏதோ ஒரு வாய்ப்பினால் விளைந்தவை என்பது புயாததொன்று. அது ஓர் உண்மையான திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றம்; புதுச் சான்றுகளுக்கான திறந்த வழி.
கேள்வி: நாம் மாற்றுக் கோள்களில் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துவிட்டால், நாம் இப்பொழுது கொண்டிருக்கிற பரிணாம வளர்ச்சிக் கொள்கை, ஒரு பரந்த எண்ணத்திற்கானதாக மாறுமா?
பதில்: அதற்கு ஏராளமான சான்றுகள்; நன்கு நிலைத்துவிட்ட கொள்கைகள் அறிவியலில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாவதற்கான முன் மாதிரிகள் உள்ளன. நான் வேற்றுக் கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளில் ஆர்வமுடையவன். நாம் அதிகம் நினைப்பதற்கு ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன. நாம் நமது கோளில் உள்ள உயிர்கள் பற்றி எந்த அளவிற்கு உண்மை என்று தெரிந்திருக்கிறோமோ, அதனால், உயிரினத்துக்கான வேற்று உயிர்களுக்கான வழிகள் இருக்கக்கூடாதா? அதில் எந்த அளவு ஒரு குறுகிய உண்மையாக, இந்தக் கோளில் உள்ள உயிரினத்தைப் பற்றி இருக்கும்?
கேள்வி: நீங்கள் சொல்ல வருவது என்ன?
பதில்: DNA விலிருந்துதான் உயிர்கள் பெறப்படுகின்றன என்று சொன்னால் அது ஒரு துணிச்சலான கருத்தாக இருக்காதா? ஆனால், ஒவ்வொரு உயிர் அமைப்பும் பெரும்பாலும் DNA போன்றவற்றிலிருந்துதான் வந்திருக்கலாம் என்று நாம் சொல்ல முடியும். இந்தக் கோளில் ஒன்றைப் போல ஒன்றைப் படைக்கும் திறனை DNA வினால் கொள்ள முடிகிறது; செயல்படுத்தும் திறனைப் புரதம் செய்கிறது. ஆனால், அவை முழுவதுமே பிரிக்கப்பட்டுள்ளன. அவை உண்மையாக இருக்க வேண்டுமானால், அவை உலகளாவியதா? அல்லது மற்ற உயிர் அமைப்புகள், ஒரே மூலக்கூறினால் (Molecule) படைக்கப்பட்டவையா? இவை எல்லாம் வெளிப்படையான கேள்விகள்தான். இப்பொழுது நாம் உயிரின் ஒரு மாதிரியைத் தான் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: 60 ஆண்டுகள் கழிந்த பிறகு நீங்கள் எப்படி நினைவுகூறப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? சுயநல மரபணு (The Selfish gene) போன்ற புத்தகங்களின் வாயிலாக உங்களது திறமையைப் பதிவு செய்த அறிவியலாளராகவா அல்லது, மதத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய சுறுசுறுப்புமிக்க ஒரு விமர்சகராகவா?
பதில்: உண்மையில், இரண்டும்தான். அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்பதாக நான் கருதவில்லை. ஆனால் அறிவியலுக்கு நான் அளித்துள்ள, மதத்திற்கு எதிரானவைகள் மறைந்து போனால் நான் மிகவும் வருத்தப்படுவேன். உண்மையிலேயே அது பரிதாபகரமான ஒன்றுதான். அந்த இரண்டு கோணங்களிலும் நான் ஏதும் முரண்பாட்டைக் காணவில்லை. அவை ஒன்றுக்கொன்று இணைந்தவையாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: அடுத்து, உங்களிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
பதில்: நான், உண்மையின் மந்திரங்கள் என்ற குழந்தைகள் புத்தகத்தைப் பாதி அளவில் எழுதி முடித்து இருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயமும் கேள்வி வடிவில் இருக்கும். உதாரணமாக: நிலநடுக்கம் என்றால் என்ன? வானவில் என்றால் என்ன? சூரியன் என்றால் என்ன? என்று இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையில் புராணக் கதைகள் இருக்கும். நான் அவற்றை மறுத்து விளக்கங்களையும், உண்மை நிலையையும் எடுத்துக் கூறுவேன். மந்திரக் கோலைக் கொண்டு தவளையை இளவரசனாக மாற்றுவதுபோல், மிகவும் மட்டமான, இயற்கைக்கு விஞ்சியது மந்திரம்; தந்திரம் எல்லாம். உண்மைத் தன்மையானது, பிரம்மாண்டமான, அதன் தரத்திலேயே ஒரு மந்திரக் கவிதையாக இருக்கும்.
அவற்றையெல்லாம் நான் கடந்து வருவேன் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
– தமிழில்: ஆர்.ராமதாஸ்
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();