கோவிலுக்கு இடம் கொடுத்தவன்
கோவிலைக் கட்டித் தந்தவன்
கோவிலுக்கு வர்ணம் பூசியவன்
கோவிலுக்குச் சிலை வடித்தவன்
கோவிலுக்குப் பணம் அளித்தவன்
இப்படி எல்லாவற்றையும் செய்தவனுக்கு
ஒரு குறை என்று வந்துவிட்டால் அதனை அவனே நேரடியாக அந்தக் கடவுளிடம் சொல்ல முடியாதா?
இடையில் எதற்காக இந்த பூணூல் புரோக்கர்கள்?
– சைதை அன்பரசன்,
ஆகஸ்ட் 16, இரவு 10.51 மணி
அம்மா, சகோதரி, மனைவி, காதலி, தோழி, மகள், அல்லது எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வாய்ப்பில்லாத, கழிப்பிடம் எங்கிருக்கிறது எனத் தெரியாமல், கையைப் பிசைந்து கொண்டு, வலியோடு அவதிப்படும் அந்த மோசமான தருணங்களைப் பார்த்திருக்கிறீர்களா ? யாருக்குமே மரண அவஸ்தை அது!
சாலையின் எந்த இடத்திலும் ஜிப்பைத் திறந்து, எப்போது வேண்டுமானாலும் இயற்கை உபாதையை வெளியேற்ற முடிகிற நம்மவர்களுக்கு, அது குறித்த சிந்தனை வர வாய்ப்பில்லைதான்! வீதிக்கு நூறு பான்பராக் கடைகள் இருக்கிற தேசத்தில் _ வீதிக்கு பத்து டாஸ்மாக் கடைகள் இருக்கிற தேசத்தில் _ பெண்களுக்கு (ஆண்களுக்கும் சேர்த்தே) கைக்கெட்டிய தூரத்தில், பொதுக் கழிப்பறைகளை கூட இன்னும் நம்மால் உருவாக்க முடியவில்லை! # சுதந்திர தின வாழ்த்துகள்!
– நெல்சன் சேவியர்,
ஆகஸ்ட் 15,
9.22 மணி
ராமாயி, கருப்பாயிக்கு மட்டுமே அம்மன் அருள் வருகிறது!!
ஸ்வேதாக்களுக்கும், சந்தியாக்களுக்கும் அம்மன் அருள் வருவதே இல்லை!!!
சாமி வந்து ஆடுவதில்லை!!
என்ன மர்மமோ!!
-சித்தன் சிபிஇ ஜூலை 27, இரவு 8.32 மணி
வேலூரில் இந்து முன்னணியினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
இத்துடன், இந்துக்கள் யாரும் முசுலிம் நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க வேண்டாம்,
இஸ்லாம் நாடுகளிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டாம், முற்காலத்தைப் போல் கட்டை வண்டிகளிலோ, நடந்தோ செல்வோம் என்றும் சொல்லியிருக்கலாமே!