முற்றம்

ஆகஸ்ட் 01-15 முற்றம்

இணையதளம்

மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமான press information burea–வின் இணையதளம் இது.

மத்திய அரசு பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள உதவும் இணையதளம். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம் பற்றிய விவரங்கள், பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், முக்கியச் சந்திப்புகள் இடம் பெற்றுள்ளன. சென்னை, மும்பை, போன்ற பிற இடங்களில் உள்ள அலுவலகக் குறிப்புகள், தேசிய ஆலோசனைக் கவுன்சில், இந்திய பிரஸ் கவுன்சில், மக்களவை, மாநிலங்களவைக் குறிப்புகள், ஆல் இன்டியா ரேடியோ மற்றும் டிடி செய்திகள், இந்தியப் பத்திரிகைப் பதிவகம் போன்ற பல தகவல்களைத் தந்து அனைவரும் அறிந்து பயன்படும் வகையில் அமைந்துள்ளது.


நூல்:

நூல்: கம்பன் ஒரு வம்பன்
கவிதைகளின் உண்மை விளக்கங்கள்
ஆசிரியர்: கவிஞர் ச.மு.ஜெகதீசன்
வெளியீடு: கவியா பதிப்பகம்,
சட்டநாதபுரம் அஞ்சல்,
சீர்காழி வட்டம் – 609 109
பக்கங்கள்: 64 விலை: ரூ.65/_

மக்களால் பெரிதும் விரும்பிப்  படிக்கப்படும் கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள ஆபாசக் கவிதைகளை _ நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை எடுத்துக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நூல்.

பக்தி என்னும் பெயரில் மக்களால் போற்றிப் பாதுகாத்து வழிபடப்படும் காவியத்தில், வருணனை என்ற பெயரில் இடம் பெற்றுள்ள சில வரிகளைக் கொடுத்து, கீழே அதன் உரையினைச் சுருங்கக் கொடுத்து விளக்கியுள்ள விதம், படிப்போர் மனதில், நாம் படிப்பது இராமாயணமா அல்லது காமாயணமா என்ற வினாவினை எழுப்புகிறது.

கம்பராமாயணத்துக்கு இந்நூல் கொடுத்துள்ள சவுக்கடிகளில் இருந்து ஒரு பாடலும் அதன் பொருளும்:- இழைந்த நூலினை மணிக்குடஞ்      சுமக்கின்ற தென்னக்குழைந்த நுண்ணிடைக் குவியிலா              வனமுலைக் கொம்பே!

இராமன் மேலிடத்தைப் பற்றி ஓரிழையாக இருக்கின்ற நூலானது, இரண்டு கும்பங்களைச் சுமப்பது போல், தளரும் இயல்புடைய மெல்லிய இடையிலே குவிந்துள்ள இளமையான அழகிய தனங்களைக் கொண்டுள்ள பூங்கொம்பு போன்றவள் என்று அனுமனிடம் கூறுகிறான்.


கல்வியின் அவசியத்தை _ இன்றியமையாமையை அறியாத பாமர மக்கள் இன்னும் நம் நாட்டில் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கல்வி புகட்ட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமை என்ற எண்ணத்தைப் படத்தினைப் பார்ப்போர் மனதில் எழ வைத்துள்ளது.

கிராம மக்களின் கல்விக்கண் திறக்க, இளம் நண்பர்கள் எடுத்த முயற்சியின் பலனாக ஒரே ஒருவர் மட்டும் முதலில் கல்வி கற்க முன்வருகிறார். பின்பு, அந்தக் கிராமத்தையே கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற்றும் இளைஞர்களின் சாதுரியத்தையும் இலட்சியத்தையும் http://www.youtube.com/watch?v=2V5na5L0Fxo என்ற இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *