உத்ரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் போராடி 10 நாட்களில் சுமார் 40,000 மக்களை மீட்டுள்ளனர்.
இப்படியொரு சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி திறமையான அதிகாரிகள் சிலருடன் டேராடூன் நகருக்கு வந்து, உத்ரகாண்ட் பகுதிகளில் தவித்துக் கொண்டிருந்த 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றி அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக செய்தி வெளிவந்தது.
80 இன்னோவா கார்களைப் பயன்படுத்தித் தமது நாட்டு மக்களைக் காப்பாற்றியதாக செய்திகள் கூறுகின்றன. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பேரழிவிற்குட்பட்ட இடத்தில் குஜராத் முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கார்கள் எப்படிப் பயணம் செய்தன?
மேலும், ஒரு காரில் ஓட்டுநர் உட்பட 7 பேர்களே செல்ல முடியும். வேண்டுமானால் உடன் 2 பேரினை அதிகமாக ஏற்றிச் செல்லலாம். 80 கார்கள் டேராடூனிலிருந்து ஒரு தடவைக்கு 720 பேர்களைத்தான் கொண்டு செல்ல முடியும். 15,000 பேர்களை மலைப்பகுதிகளிலிருந்து கீழே கொண்டு வர, போக வர என்று சேர்த்து 21 தடவைகள் பயணம் செய்ய வேண்டும்.
கேதார்நாத்திலிருந்து டேராடூன் 221 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. எனவே, 21 முறை என்று கணக்கிடும்போது ஒவ்வொரு காரும் சுமார் 9,300 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். சாதாரணமாகவே மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது நேரம் அதிகமாகும்.
சராசரியாக மணிக்கு 40 கிலோ மீட்டர் என்று வைத்துக் கொண்டால்கூட 233 மணி நேரப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல், குஜராத் மக்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றி பிற நாட்டு மக்களாக இருப்பின் எப்படியும் போங்கள் என்று தவிக்கவிட்டு வந்த மோடியின் வீரச்செயலினை என்னவென்பது? நன்றி: ஜிவீனீமீ ஷீயீ மிஸீபீவீணீ
இவர்தான் மோடி
இந்தியப் பெண்களின் சக்திக்குத் தலை வணங்குகிறேன்: மோடி அன்னையர் தினத்தில் வீண் பேச்சு
இந்தியப் பெண்களுக்குத் தான் தலை வணங்குவதாக நர.மோடி தனது திருவாய் மலர்ந்து மற்றொருமுறை பொய்யுரைத்துள்ளார். இவர் எவ்வாறு எல்லாம் தலைவணங்கி இருக்கிறார் என்பதைக் கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
(1) முன்னர் இவர்… தனது மனைவி யசோதா பாய் மோடியைத் திருமணம் முடித்து… பின்னர்.. .கை கழுவி… கழட்டிவிட்டதன் மூலமாக.. தனது மனைவிக்குத் தலை வணங்கி இருக்கிறார்….(நர.மோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பிவருகின்றனர் நர.மோடியின் கொள்கைக் -கோடாரிகள்.)
(2) குஜராத்தில் பல கலவரங்களைத் தூண்டிவிட்டு… கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுக்களைக் கொன்றது மூலமாகவும்… கர்ப்பிணிப் பெண்களுக்கு, தாய்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்…
(3) கலவரங்களில் பெண்கள் காவி தீவிரவாதிகளால்… கற்பழிப்பு செய்யப்படுவதை….. பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்காமல்…. அதை அடக்காமல்.. வேடிக்கை பார்க்குமாறு… காவல் துறையினருக்குக் கட்டளையிட்டதின் மூலம்… இளம்பெண்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்…
(4) தனது சொந்த மாநிலத்திலேயே… தலித்தாக இருக்கும் ஒரே காரணத்திற்காக… குடிநீர்… மின்சாரம்.. மற்றும் அடிப்படை வசதிகள்கூட செய்து தராமல்… தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தலைவணங்கி இருக்கிறார்…
(5) இஷ்ரத் ஜஹான்…. ஷொராபுதீன்… போலி என்கவுண்டர்கள் மூலம்… அநியாயமாக மனிதப் படுகொலைகள் செய்து… நியாயத்திற்குத் தலைவணங்கி இருக்கிறார்….
(6) குஜராத்தில் 30,000-திற்கும் மேலதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது…. இதன் மூலம் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் பெண்களுக்குத் தலை வணங்கி இருக்கிறார்…
(7) சிறு தொழில்… குறு தொழில்… மற்றும் சாமான்ய மக்களுக்கு தொழில்துறை… வேலை வாய்ப்புகளை அளிக்காமல்.. பன்னாட்டு மற்றும் இந்திய பெருமுதலைகளுக்கு… தனது மாநில விவசாய நிலங்களை அழித்து… பெருமுதலாளிகளுக்கு தொழிற்சாலைகள் கட்ட அனுமதித்ததின் மூலம் ஒட்டு மொத்த ஆண்கள்.. பெண்கள்… விவசாயிகள்.. சிறு..குறு.. தொழிலாளர்கள்… அன்றாடம் காய்ச்சிகள்… வாயில் மண்ணள்ளிப் போட்டு… ஒட்டுமொத்தமாக ஆண், பெண் பாகுபாடு இல்லாமல்…தலைவணங்கி இருக்கிறார்…
-_ கு.கார்த்திகேயன், முகநூலில்…