கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையைச் சேர்ந்த விவசாயி மல்லப்பனும் அவரது மனைவி காளியம்மாளும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சாப்பிடாமல் 2 நாள்கள் பூஜை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென்று காளியம்மாள் கணவனின் கண்களைக் குத்தியுள்ளார். உடனே, கோவை அரசு பொதுமருத்துவமனையில் மல்லப்பன் சேர்க்கப்பட்டார். கண்களின் கருவிழிகள் மிகவும் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. மல்லப்பனின் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply