தற்கொலை

ஜூலை 16-31 2013

விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை உடல்நலக் குறைவால் 3,663 பேர்களும் குடும்பப் பிரச்சினையால் 4,842 பேர்களும் தற்கொலை செய்துள்ளனர். உடல்நலக் குறைவு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் குடும்பப் பிரச்சினை அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.

19 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் மணிப்பூர் (46,635) முதலிடத்தில் இருக்கிறது. 15லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 43.8 சதவிகிதம் குடும்பப் பெண்களும் 78.8 சதவிகிதம் மாணவர்களும், 30லிருந்து 44 வயதுவரை உள்ளவர்களில் 36.7 சதவிகிதம் விவசாயிகளும் 35.2 சதவிகிதம் வேலைவாய்ப்பற்றவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

திருமணமானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *