புகையிலையை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தடை செய்வீர் என்ற வாசகத்தை உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது.
151 நாடுகளில் உள்ள வயது வந்த பெண்களில் 7 சதவிகிதத்தினரிடம் புகையிலைப் பழக்கம் இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும், புகைப் பிடிப்பவர்கள் விடுகின்ற புகையினால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று அல்லாத நோய் களால் இறப்போரில் 63 சதவிகிதத்தினர் புகையிலைப் பழக்கம் உடையவர்கள்.
புகைப்பிடிக்கும்போது வெளிவரும் புகையினால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மதுரை ஆசீர்வாதம் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெபசிங் கூறியுள்ளார்.