போப் மாளிகை மர்மங்கள் செய்தி அநேகமாக தமிழ்நாட்டுக்குப்புதியது. ஆசீர்வாதக் கூட்டங் களுக்குப் படையெடுக்கும் ஆன்மீக அன்பர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அய்ரோப்பிய நாட்டில் சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய பாதிரியார் களுக்காக போப் மன்னிப்புக் கேட்ட செய்தியை இந்தக் கட்டுரை எனக்கு நினைவுபடுத்தியது. -கோ.ஜெயமுருகன், கோவிலாம்பாக்கம்
அட்சய திருதியை பற்றி பல பத்திரிகைகள் புராணக்கதைகளைப்போட்டிருந்தன.ஆனால்,உங்கள் உண்மை மட்டும்தான் அதனால் ஏற்படும் தீமையைச்சுட்டிக்காட்டியிருந்தது. வியாபாரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். அரசாங்கம் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதா?
-ஆர்.அருமைச்செல்வம், பாளையங்கோட்டை
உண்மை பத்திரிகையை சில மாதங்களாகத் தான் படித்துவருகிறேன். வெகுஜனப் பத்திரிகை களில் சொல்லப்படாத பல துணிச்சலான கருத்துகளை எழுதுகிறீர்கள். பெரியாரின் கட்டுரை களைப் படித்துவருகிறேன். அவர் கடவுள்,மதம் பற்றிக் கூறியது இந்தக் காலத்துக்கும் பொருந்துவது ஆச்சரியமாகவுள்ளது. மேலும், கடந்த இதழில் வெளியான பகவத் கீதை பற்றிய கேள்விகள் அருமை. டி.வி.க்களில் புராணங் களைக் காட்டிவரும் காலத்தில் அவற்றின் பொய்களை அம்பலப்படுத்தி தொடர்ந்து கட்டுரை களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
– எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர்.
ஆசிரியர் கி.வீரமணி எழுதும் அய்யாவின் அடிச்சு – வட்டில் தொடர் விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த கால வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் ராமலீலாவை டெல்லியில் நடத்துகிறார்கள் என்று டெல்லியில் உள்ள எனது நண்பன் சொன்னான். தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இராவணலீலா நடத்தவேண்டும்.
– எம்.ராஜவர்மன், பட்டுக்கோட்டை.