பார்ப்பனர்கள் புராணக் கதைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தில் நடந்ததாகவும், ஒவ்வொரு யுகத்திற்கும் பத்தாயிரக் கணக்கான / லட்சக்கணக்கான ஆண்டுகள் என்றும் கூறுவர். உதாரணமாக, ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் உண்மையானவை என்றும், அவை ஒவ்வொன்றும் இன்னின்ன யுகத்தில் நடந்தது என்றும் கூறுவார்கள். ராமாயணம் துவாபர யுகத்தில் நடந்ததாகவும், அது லட்சக்-கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் கூறுவர்.
அய்யா பெரியார் அவர்கள் பார்ப்பனர்களைப்பற்றிக் கூறும் பொழுது அவர்கள் பின்புத்தி இல்லாதவர்கள் என்று கூறுவார். அதற்கு உதாரணம் இந்த யுகப்புரட்டில் உள்ளது.
மனுதர்ம சாத்திரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் ஸ்லோகம் 301, 302இல் நான்கு யுகங்களைப்பற்றிச் சொல்லியிருப்பதாவது:
301) கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நாலும் அரசன் நடையினாலே உண்டாகின்றன. ஆகையால், அரசனே யுகமென்று சொல்லப்படுகின்றான்
302) அதாவது அரசன் அக்யானத்-தாலும் சோம்பலினாலும் உலகத்தாரிடம் நியாய அநியாயத்தைக் கண்டுபிடிக்-காமலிருந்தால் கலியுக தருமமும், நியாய அநியாயங்கள் தெரிந்தும் சரியாய் அதிகாரம் செய்யாவிடில் துவாபரயுக தருமமும், நியாய விசாரணையில் முயற்சியுள்ளவனாக இருந்தால் திரேதாயுக தருமமும், சாஸ்திரப்படி காரியங்களை தானும் அனுஷ்டித்துப் பிரசைகளையும் அனுஷ்டிக்கச் செய்தால் கிரேதாயுக தருமமும் நடக்கிறது.
அதாவது, ஒருவனைப் பார்த்து நல்லவன் என்றோ தீயவன் என்றோ கூறுவதைப் போல, இன்னும் விளக்க-மாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு அரசன் செய்யும் அரசாட்சியைப் பொறுத்து நல்லாட்சி என்றும் கொடுங்கோலாட்சி என்றும், ஊழல் ஆட்சி என்றும் சொல்வதைப்போல், ஒவ்வொரு அரசனின் ஆட்சியே யுகம் என்று சொல்லப்படுகிறது.
மேற்சொன்ன யுகங்களின் விளக்கங்கள் அல்லது அளவுகோல்படிப் பார்த்தால் ஒவ்வொரு யுகத்திற்கு இத்தனை இத்தனை லட்சம் ஆண்டுகள் என்பதும், ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் லட்சக்கணக்கான ஆண்டு-களுக்குமுன் உண்மையாகவே நடை-பெற்றதாகவும் சொல்வது உண்மை அல்ல என்பதும், அது, நம் இனமக்களை ஏமாற்றுவதற்காக பார்ப்பனர்களால் புனையப்பட்ட கற்பனை என்பதும் விளங்குகிறது அல்லவா?
– ஆர்.டி. மூர்த்தி, திருச்சி-17