படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது.
இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.
2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது
OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.
BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.
BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.
MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.
SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.
ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.
35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்…. தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்…. இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு – இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!
(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.