பதிவுகள்

மார்ச் 01-15
  • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தொடங்கிய அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் பிப்ரவரி 6 இல் நடைபெற்ற கூட்டத்தில் முஷாரப்மீது ஷூ வீசப்பட்டது.
  • தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி பிப்ரவரி 9 இல் தொடங்கியது.
  • பாகிஸ்தானில் 52 பேர் கொண்ட மந்திரிசபை பிப்ரவரி 9 இல் கலைக்கப்பட்டது.
  • எகிப்தில் அதிபர் முபாரக் பிப்ரவரி 11 இல் பதவி விலகியதாக துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததையடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.  செப்டம்பரில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்படும் என்று பிப்ரவரி 13 இல் இராணுவம் அறிவித்துள்ளது.
  • மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு தோணிமூலம் சரக்குப் போக்குவரத்து பிப்ரவரி 12 இல் தொடங்கப்பட்டுள்ளது.
  • கருநாடகத்தில் சுயேச்சை எம்.எல். ஏக்கள் 5 பேரை சபாநாயகர் பதவி நீக்கம் செய்தது செல்லும் என்று கருநாடக உயர் நீதிமன்றம் பிப்ரவரி 14 இல் தீர்ப்பளித்துள்ளது.
  • ஊழல் வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பிப்ரவரி 15 இல் கூறியுள்ளார்.
  • சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஆதித்யாவைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் பூவரசி என்ற இளம்பெண்ணுக்கு பிப்ரவரி 15 அன்று ஆயுள் தண்டனை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • எஸ் – பாண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவுக்கும் தேவாஸ் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு பிப்ரவரி 17 இல் ரத்து செய்தது.
  • ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிப்ரவரி 18 இல் தொடங்கியது.
  • உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19 அன்று பங்களாதேஷ் நாட்டின் தலைநகரமான டாக்காவில் தொடங்கியது.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (வயது 81) பிப்ரவரி 20 அன்று ஈழத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் காலமானார்.
  • ஆந்திரப் பிரதேசத்தில் தனித்தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து,ஒத்துழையாமை இயக்கமும்,பிப்ரவரி 22,23 தேதிகளில் 48 மணி நேர முழு வேலை நிறுத்தமும் நடைபெற்றது.
  • நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *