ஈரோட்டுச் சூரியன் – 9

பிப்ரவரி 16-28

நாகம்மையை மணந்தார் இராமசாமி – மதுமதி

நாகம்மையை

மணந்து கொள்கிறேன் என

இராமசாமி சொல்ல

சின்னத்தாயம்மையோ

இராமசாமியை

சினந்து கொண்டார்..

நாயக்கரின் மனம்

அதிர்ந்தது:

சீமாட்டியை

மணமுடிக்கலாம் என்ற

அவரின் எண்ணம்

உதிர்ந்தது:

இராமசாமியின்

மாமன் மகள்தாள்

நாகம்மை;

வசதி குன்றியவள் என்பதால்

வெறுக்கிறார்

தாயம்மை;

நாகம்மையின் தந்தை

தாயம்மையின்

தூரத்து சொந்தம்;

அதனால் என்னவோ

இராம சாமியை வேண்டினார் நாயக்கர்..

இராமசாமியின்

இளமைக் குறும்புகள்

தாயம்மையை

யோசிக்க வைத்தன;

யோசித்தால் தைத்தன;

இராமசாமியின்

போக்கை மாற்ற

விவாகம் மட்டுமே வழி;

அதன் பிறகாவது அவன்மேல் படட்டும் இறைவன் ஒளி;

நாகம்மையின் எண்ணத்தை நாயக்கரும் ஆதரித்தார்..

நாகம்மையை மருமகளாக்கிக் கொள்ளலாம்..

வேறு வழியில்லாமல் முடிவை எடுத்தனர்;

அவர்தம் இல்லத்திற்கு தகவலைக் கொடுத்தனர்;

நாகம்மையால் நம்பமுடியவில்லை..

கனவாவென கிள்ளிப் பார்த்தாள்;

தன் தோழிகளிடம் சொல்லித் தீர்த்தாள்;

இராமசாமிக்கு அகவை பத்தொன்பது நாகம்மைக்குப் பதிமூன்று;

பெற்றோரின் ஆசியோடு நாகம்மையின் கழுத்தில் இராமசாமி இட்டார்  முடிச்சு மூன்று;

மாமனை மணமுடித்த மகிழ்ச்சியில் நாகம்மை..

மகனின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நாகம்மை..

1898 ன் ஆண்டு இவ்விவாகம் நடந்தது;

1998 ம் ஆண்டு ஒரு நூற்றாண்டைக் கடந்தது;

 

– சூரியன் உதிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *