மடல் ஓசை

பிப்ரவரி 01-15

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,

நான் பகுத்தறிவு தந்தையின் மேல் அதிக பற்று கொண்டவன். அவரைப் போல் மகத்தான ஒரு மனிதர் பிறக்காவிடில் இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.

நான் எந்த அரசியலோ, எந்த அமைப்போ சேராதவன். பகுத்தறிவுப் பகலவன் தந்தையின் வழியில் நடக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

தங்களது உண்மை இதழில், நாள் டிசம்பர் 16-_31 2012 பக்கம் 9இல் பத்து கோரிக்கைளுமே சிறந்தவை. அதில் 8ஆவதாக கூறப்பட்டிருப்பது நடந்தால், எனது 7 மாத பெண் குழந்தைக்கு ஜாதியற்றவர் என்றே சான்றிதழ் வாங்குவேன்.

அவர்களாவது ஜாதி, கடவுள், அடிமை இல்லாமல் மனிதன், இயற்கை, தோழமையுடன் வாழட்டும். ஜாதி ஒழிய போராடும் தங்களுக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும்.

யாரும் பார்த்திராத கடவுளை தேடித்தேடி அலைகிறான். பக்கத்தில் இருக்கும் மனிதனை மறக்கிறான்.

இல்லாத ஏழைகள் எத்தனையோ பேர் இருக்க, இருப்பவன் திருப்பதியில் பணத்தை கொட்டுகிறான்.

பெண்ணை அம்மன் சாமி என்று கும்பிட வைக்கிறான். பார்ப்பனன் கருவறையில் பெண்ணுடன் உல்லாசம் கொள்கிறான். 2020ஆம் ஆண்டில் வெள்ளைக்காரன் நிலாவுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறான்.

ஆனால் நமது மக்களோ 2020ஆம் ஆண்டில் 2020 ஜாதியை கண்டுபிடித்து ஜாதி பொருட்காட்சி நடத்துவான்.

மேல்ஜாதி உயர்ஜாதி என்று ஆணவம் கொள்ளும் இவர்கள் வாய் வழியாக பிறந்தார்களா?

_ ச.யுவராஜ், வெட்டுவான்கேணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *