தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று நல்ல கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் கொடுத்து மகிழ்வார் எம்.ஜி.ஆர்.
— யுவகிருஷ்ணா