சிந்தனையாளர்களே சாதனையாளர்கள்

பிப்ரவரி 01-15

தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விண்வெளி தொழில்நுட்ப திருவிழா ஜனவரி 21 முதல் 23 வரை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் மேனாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

புதுதில்லி இந்தியா ரஷ்யா கூட்டுத்திட்டம் பிரமோஸ் ஏவுகணை தலைமை நிர்வாகி மற்றும் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை பெங்களுரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மேன்மை வாய்ந்த விஞ்ஞானி, மற்றும் தலைமை நிர்வாகி டாக்டர் கு.தமிழ்மணி ரஷ்யன் கவுன்சில் ஜெனரல் நிக்கோலஸ் லிஸ்டபோவ், பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் வீகேயென் கண்ணப்பன்,துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தமது உரையில்,“நீங்கள் அனைவரும் கனவு கண்டு அவையனைத்தும் சாதனைகளாக மாறவேண்டும். நீங்கள் விரும்பும் எல்லையை அடைய மற்றும் போதியஅறிவைப் பெறவேண்டும். கடின உழைப்பு, சாதனைப் படைப்பு, தோல்விகளால் துவளாமை, வெற்றிகளையே உங்கள் இலட்சியங்களாக்க வேண்டும். விண்வெளி சாதனை யில் உங்கள் தொலை நோக்கு என்ன? என்பதைச் சிந்தியுங்கள்!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விண்வெளி திருவிழாவில் பங்கேற் பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். மாணவருடன் கலந் துரையாடி அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த விழா அமையும் என நான் நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் விண்வெளி ஆய்வுக் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக நாற்பது ஆண்டுக்காலம் பணி செய்துள்ளேன். என்னோடு பணி செய்த சிறந்த விண்வெளி ஆய்வு முன்னோடிகளையும் தொழில்நுட்ப வல்லுநர் களையும் இப்போது நினைவு கூர்கிறேன். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் டாக்டர் விக்ரம் சாராபாய் டாக்டர் ஹம்ம பிரகாஷ், டாக்டர் சத்தீஷ் டவான், ஆகியோர் விண்வெளி அனுபவங்கள் வெற்றிகரமாக செலுத்தியபோது பெருமகிழ்வு அடைந்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒருசில கூட்டுத்திட்டங்கள் தோல்வி யடைந்த போது மிகவும் மனம் வருந்தியிருக்கிறேன். எங்களுடைய வெற்றிகளிலும் தேவைகளும் என்னோடு பணியாற்றியவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினார்கள் இன்று இப்பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவருடன் நான் விண்வெளித்துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

நண்பர்களே உங்களையெல்லாம் காணும்போது எனக்கு ஒன்று! ஞாபகத்திற்கு வருகிறது  புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தயாரிப்புகளும் என் கண் முன்னே நிற்கின்றன கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனை படைத்தவர்களான விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள்  படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மேன், மின் விளக்கைக் கண்டுபிடித்த  தாமஸ் ஆல்வா எடிசன், தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்களான ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் கண்டுபிடித்த சக்தி தொடர்பான சூத்திரம்  ணி = விநீ2, எண்கணிதத்தில் சீனிவாச ராமானுசம் கண்டறிந்தவை,எல்லை என்று கண்டறிந்த எஸ்.சந்திரசேகர்,ராமன் விளைவை கண்டறிந்த சர்.சி.வி.ராமன். புத்தாக்க உருவாக்கமும் கண்டு பிடிப்புகளும் படைப்பாற்றல் கொண்ட மனித மூளையில்  உருவான சிந்தனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றன.  அதிக அளவு சிந்தனை மனம் கொண்டவர்கள் இருந்தால் அந்நிறுவனம் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த சாதனைகளை உருவாக்க முடியும்.

விண் வெளித் தொழில்நுட்பம் என்பது பல அடையாளங் களை சார்ந்திருக்கிறது. தொலைநோக்கு உயர்தொழில் நுட்பம் கட்டுபாடுகளும் சரிசமம் . தலை சிறந்த மனிதமூளைகளின் கலவை சாதனையே விண்வெளித் தொழில்நுட்பம் ஆகும். இளைஞர்கள் சிந்தனைப் பொலிவுடன் செயல்படுங்கள் நண்பர்களே உங்களைப் போன்ற இளைஞர் களிடம் இந்தியாவில் ஒரு இந்தியா அமெரிக்காவும் கண்ட கனவை பற்றி சொல்லப்போகிறேன். புது டில்லியில் 2005ஆம் ஆண்டு அனைத்துலக குழந்தைகள் போட்டியில் கலந்துகொண்டேன்.

இது சங்கர் அமைப்பால் நடத்தப்பட்டது. அப்போட்டியில் 13 வயதுடைய அரித்திரா கிருஷ்ணா என்ற பெண் தொலைநோக்கு சிந்தனையோடு கி.பி.மூவாயிரத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்லியிருந்தாள். அதில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடியேறுவதாகவும் அங்கு மனித பண்பாடு செழித்து ஓங்குவதாகவும் சொல்லியிருந்தார்கள். இந்த குடியேற்றங்கள் வியாழக்கிரகத்தினால் உண்டான விண்கற்களல் தகர்த்தெறியப்பட்டது. இறுதியில் செவ்வாய் கிரகம் அழிந்து போகாது. விஞ்ஞானிகள் இவ்வழிவை தடுத்து செவ்வாய் கிரகத்தை காப்பாற்றுவதற்கு ஆவன செய்கிறார்கள். ஒரு இளயமனதில் ஏற்பட்டது இந்த அருமையான சிந்தனை! அரித்தரா கிருஷ்ணாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கற்பனையை கண்டு நான் வியந்தபோது ஒரு உண்மையான விண்வெளி சோதனை நடத்தப்பட்டது. 2005 ஜுலை  4 ஆம் நாள் விண்வெளியில் ஓர் அற்புதம் நடந்தது.

நாசா அனுப்பிய விண்கலம் (ஞிமீமீஜீ மினீஜீணீநீ) டெம்பில் 1 என்ற மற்றொரு கலத்தோடு மோதி ஒரு கால் பந்தாட்ட மைதானத்தைப் போன்ற அளவிற்கு பள்ளத்தை உருவாக்கியிருந்தது. அதனுடைய ஆழம் 14 மாடி கட்டிடத்தின் அளவிற்கு இருந்தது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ல் நான் அமெரிக்காவில் உள்ள பாசதெனா என்ற இடத்தில் இருந்த போது செவ்வாய் கிரக ரோவர் விண்கல சோதனை அங்கு ஒரு பெண் அதை பற்றிய விவரங்களையெல்லாம் தெளிவாக சொன்னார். அவர் பெயர் ஜென்னி. இயந்திர பொறியியல் படித்தவர் அவருக்கு செவ்வாய் கிரக இயந்திர மனித சோதனை சாவடியில் வேலை கிடைத்தது. அவர் செவ்வாய் கிரக ஆய்வு விண்கல வடிவமைப்பில் பெரும் பங்காற்றியது குறித்து மகிழ்ந்தார்.

சந்திராயன் 1 என்ற செயற்கைக்கோள் சந்திர மண்டல ஆய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்தியா அமெரிக்கா கூட்டுத் திட்டம். இது ஒரு சிறந்த வெற்றிகரமான திட்டமாகும். நாசா தலைமை விஞ்ஞானி என்னிடம் சொன்னார். அமெரிக்காவை போன்று பல நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அம்முயற்சியில் தோல்வி கண்டனர். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஆய்வு செய்ததில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தோம். ஆகவே கூட்டு முயற்சிக்கு சிறந்த பலன் கிடைத்தது. விண்வெளியையும் நாம் தாய் அன்போடு அணுகவேண்டும். நாம் வசிக்கும் இப்பூமியையும் வறுமையற்ற போர்க்களமற்ற மகிழ்வான வாழ் விடமாக நாம் செய்யவேண்டும்.

ஆகஸ்ட் 5, 2012 ல் நாசா தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றிகரமாக ஒரு சோதனைச் சாலையை விண்வெளியில் அமைத்தார்கள். இதில் க்யூரியா சிட்டி என்ற தானியங்கி ஆகஸ்ட் 5 அன்று 10.32 மணியளவில் இறங்கியது. இந்த தானியங்கி செவ்வாயில் உள்ள உயிர்வாழ் இனங்களைப் பற்றி செய்திகளைத் தரும். க்யூரியா சிட்டியின் வெற்றி ஒருங்கிணைந்த முயற்சியின் வெற்றி செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆய்வு மய்யத்தில் நான் பணியாற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் 1971  அக்டோபர் 9 அன்று நம்நாடு ராக்கெட்டை முதன்முதலில் விண்ணில் செலுத்தியது இதற்காக ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்திற் கான பணி செய்த சிறந்த நண்பர்களை நினைத்து பார்க்கிறேன். சாலிடுமோட்டார் வளர்ச்சிக்கு உதவிய வர்களை நினைத்துப் பார்க்கிறேன். ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும்போது ஏற்படும் குறு குறுப்பு அதைத் தொடர்ந்து அச்சம் உத்வேகம் இவையெல்லாம் வரலாற்றில் பதியபட்டவையாக என்மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

திரும்பவும் பயன்படுத்தக்கூடிய தானியங்கி செலுத்து இயந்திரங்கள் கீழ்க்காணும் அய்ந்து அம்சங்கள் தொடர் ஆய்வை மேற்கொள்ள செய்தது. அவை அனைத்தும் வேளாண்மை, உணவை பதப்படுத் துதல், கல்வி, நலவாழ்வு, செய்திதொடர்பு, கட்டமைப்பு உருவாக்கம் என்பனவாகும். இதுபோன்று மின் ஆளுமைத்திட்டம், நகர அமைப்பு திட்டம் ஆகிய வையும் செப்பம் செய்ய வேண்டும்,என்று பேசியவர் மாணவர்கள் நீங்களும் அறிவியல் உணர்வோடு வாழவேண்டும்,என்று கேட்டுக்கொண்டார்,“. நண்பர்களே நீங்கள் எப்படி இந்த உலகால் அறியப்பட முடியும்? உங்களை நீங்களே தயார்செய்து கொள்ள வேண்டும். மனித வரலாற்றில் நீங்கள் ஒரு பக்கத்தையாவது நிரப்ப வேண்டும். அது  ஒரு புதிய கண்டு பிடிப்போ அல்லது புதிய சிந்தனையாகவோ இதனால் சமூகம் மாற்ற பெற வேண்டும் இதுவே உங்களுக்கு தரும் அழைப்பாகும்,என்று இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்தார்.

விழாவின் தலைமையுரையாற்றிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில்:-  கிராமப்புற மாணவர்களுக்கு விண்வெளி சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்வதற்காக இவ்விழா நம்முடைய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பிரமோஸ் ஏவுகணையை அனைவரும் அறிந்துக்கொள்ளக்கூடிய வகையில் பிரமோஸ் ஏவுகணை இங்கு காட்சிப்பொருளாக வைத்திருப்பது பெருமை நாம் பெருமைப்படக்கூடிய செய்தியாகும். மேலும் தொழிலகங்களுக்கும் தொழிற் சாலைகளுக்கும் வழிகாட்டக்கூடிய தானியங்கி தொழில்நுட்பத்தை பாஸ்ரெக்ஸ்ராத் நிறுவனத்தின் மூலம் நம்முடைய பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்தியுள்ளமையும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

மேலும் மேனாள் குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் அய்ந்தாவது முறையாக நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து சிறப்பிப்பது நம்மிடையே அவர்கள் கொண்டிருக் கின்ற பற்றுதலை சமூதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.

எதிர் காலத்தை நிர்ணயிக்ககூடியவர்களாகிய நீங்கள் சிறந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர்களாவும் விஞ்ஞானிகளாகவும் விளங்க வேண்டும் என்றும் அதற்கு இதுபோன்ற தொழில் நுட்ப திருவிழாக்கள் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய அளவிற்கு வாய்ப்பாக அமையும் எனக்கேட்டுக் கொண்டார்.நிறைவு விழாவில் சந்திராயன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அன்ணாதுரை பங்கேற்று மாணவச் செல்வங்களுக்கு விண்வெளி ஆய்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நான்குநாட்களும் பல்கலைக் கழக வளாகம் மாணவ,மாணவியரால் நிரம்பி வழிந்தது.விழாவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் விண்ணில் பறக்கவும்,விண்ணை ஆளவும் எண்ணம் கொண்டவர்களாகத் திரும்பினர்.

பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் பெரியார் மணியம்மை பல்கலை மாணவி-மாணவர்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மின்னணு தொடர்பியல் நிறைவாண்டு படித்து வரும்,தேன்மொழியும், இயந்திரவியல் நிறைவாண்டு பயின்று வரும் அருண்பிரகாசும் விண்ணில் பாயும் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணிக்குத் தேர்வாகி பெருமை யிருக்கிறார்கள்.தேன்மொழிக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகில் உள்ள சேப்ளாநத்தம் கிராமம். இவரது தந்தை தேவதாஸ் ஒரு சாதாரண விவசாயி. தாய் ராஜேஸ்வரி. சிறுவயது முதலே என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக பொறியியல் படிப்புக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆயினும் பொறியியல் துறையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த இவரது மாமா ஆனந்த், பொறியியல் பயிலுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து

பெண்களுக்கு உயர்கல்வி தேவையா, பெண்கள் படித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கூறுபவர்கள் மத்தியில் சாதனை படைத்து அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் உழைத்தார்.

“ பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேர்வாகவேண்டும் என்பதே எனது தாகமாக இருந்ததால் படிப்பையே சுவாசமாகச் சுவாசித்தேன்.

அதனால் நான் எனது துறையில் 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெற, பிரமோஸ் ஏவுகணைத் திட்டப் பணியில் சேர்வதற்கான தகுதித்  தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நான், நம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வை எதிர்கொண் டேன். அதில் மின்னணுவியல் தொடர்பாக 40 கேள்விகள் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்குமே சரியாகப் பதில் அளித்தேன். ஒரு வாரம் கழித்து, நான்  தேர்வு செய்யப் பட்டுள்ளதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன்.நம்மால் இந்த திட்டத்துக்குத்  தேர்வாக முடியுமா என்ற பயம்  ஆரம்பத்தில் இருந்தது. முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை என எங்கள் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஊக்குவித்தனர் என்று கூறுகிறார் தேன்மொழி.

இவரைப்போலவே  கடலூர் மாவட்டம் அறந்தாங்கியைச் சேந்தவர் அருண்பிரகாஷ்.. தந்தை ஞானப்பிரகாசம். தாய் அந்தோணி மேரி. இவருக்கும் பொறியாளர் ஆவதே சிறுவயது ஆசை. எனது தந்தை காலமாகிவிட்டாலும்.தாயாரால் கஷ்டப்பட்டு படிக்க வைக்கப்பட்டுள்ளார்.
“பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தை பற்றி என்னோடு பயிலும் சக நண்பர்கள் கூறினர். உடனே, எப்படியாவது நாமும் பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தை வகுத்துக் கொண்டு அதை  நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.

இந்தத் திட்டத்துக்குத் தேர்வாவது ஆரம்பத்தில் மலை மாதிரியான விஷயமாகத் தெரிந்தது. ஆனாலும், மலைத்து அப்படியே நின்றுவிடாமல், நம்மால் முடியும்… முயற்சி செய்வோம் என்று கஷ்டப்பட்டு உழைத்தேன். தற்போது, நம் நாட்டின், ரஷ்ய நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். புனேயில் எனக்கு தொழில்நுட்ப, செயல் முறைப் பயிற்சி வழங்கப்படும். பொறியியல் துறை என்ற பெருங்கடலில் இப்போது தான் சிறுபடகில் இறங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

இன்னும் நான் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் என்பது  எனக்குத் தெரியும். எனது பயணம் வெற்றிகரமாகத் தொடரும்! என்கிறார் அருண்பிரகாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *