இ |
ன்று அமெரிக்காவில் உணவுப் பெட்டிகள் ஆங்காங்கே பசித்தவர்கள் உண்பதற்காக வைக்கப்படுகின்றன. அதற்கு காரணமானவர் மேடம் டுங்கன்.
இந்த உணவுப் பெட்டிகளுக்குப் பின்னால் ஓர் உருக்கமான உண்மை நிகழ்வு உண்டு.
நான் எனது மகளுக்கு ஆங்கில இலக்கியம் கற்பிப்பேன் post-colonial literature பாடம் அவர்களுக்குச் சொல்லித்தரும் போது *மேடம் டுங்கன்* பற்றிய சிறந்த கட்டுரை கிடைத்தது.
ஒட்டுமொத்த அமெரிக்காவின் ஆன்மாவை உலுக்கிய *மேடம் டுங்கனின்* உண்மை நிகழ்வு.
மேடம் டுங்கன் விடுதிகளுக்கு ஆடைகளை தைத்துக்கொடுத்து அதன் மூலம் பொருள் ஈட்டி ஏழைகளுக்கு உதவி வந்தார். 1861 உள்நாட்டுப் போருக்கு அதிகம் பேரைப் பலிகொடுத்த அமெரிக்க மாகாணம் *நார்த் கரோலினா*. அதிகம் பேர் பலி என்றால் அதிக அநாதைகள் உருவாக்கப்படுகிறார்.
ஏற்கனவே முதலாளிகளால் கொல்லப்பட்ட கருப்பின அடிமைகளின் பிள்ளைகளை வளர்த்து வந்தார். *மேடம் டுங்கன்*, இப்போது உள்நாட்டுப் போரால் உயிரிழந்த வெள்ளைக்காரர்களின் பிள்ளைகளையும் வளர்க்கும் கடமையை ஏற்றுக்கொண்டார். அவர் எப்போது யாரிடமும் சென்று கைநீட்டி பணம் வாங்கியதில்லை. தன்னுடைய ஊதியம் முழுவதையும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கே செலவழித்து வந்தார்.
மொத்தம் 24 பிள்ளைகள் அதில் 8 வயது சிறுவன் அவனது 2 வயது தங்கை மற்றும் பல வெள்ளைக்கார சிறுவர்களும் இருந்தனர். டுங்கனின் இல்லத்தில் அதிக வயது உடைய கருப்பினச் சிறுவன் 16 வயது *ஆரோன்* தான் மற்றவர்கள் எல்லாம் சிறுவர்கள்.
அது ஒரு குளிர்காலத் துவக்கம். உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது, *ஆரோன்* வந்து கூறுகிறார், *மேடம் டுங்கன்* நாங்கள் பட்டினியாய் இருந்துவிடுவோம் ஆனால் ஜூனி(2 வயது வெள்ளைக்காரக் குழந்தை) பசி தாங்கமாட்டாள் என்கிறார். நீண்ட நாள் உள்நாட்டுப் போரால் மேடம் டுங்கனின் வருவாய் நின்றுவிட்டது. கையிருப்பும் கரைந்து போய்விட்டது. வேறு வழியில்லாமல் இறந்துபோன தனது தூரத்து உறவினரின் கணவரான *த சாண்ட்விச் பார்டிமேன்* என்று அழைக்கப்படும் அய்ரீஸ் நபரிடம் உதவி கேட்டுச் செல்கிறார்.
த சாண்ட்விச் பார்டிமேன்
அய்ரீஸ் நபர் அயர்லாந்தில் இருந்து தோல் பதனிடும் தொழில் செய்வதற்காக நியு கரோலினா வந்தவர். பணக்காரரான *மிஸ் ஜெம்வெல்* என்ற மேடம் டுங்கனி உறவுக்காரப் பெண்ணை *த சாண்ட்விச் பார்டிமேன்*திருமணம் செய்துகொண்டார். அதன் மூலம் அவருக்குப் பெரும் செல்வமும் *மிஸ் ஜெம்வெலின்* மூதாதையாரின் சொத்தும் கிடைத்தன. ஆனால், திருமணமான சில ஆண்டுகளில் மிஸ் ஜெம்வெல் இறந்துவிடுகிறார்.
அவரது கணவர்
த சாண்ட்விச் பார்டிமேன்
அளவுகடந்த சொத்து மனைவியின் மூலம் வந்ததால் வேலைக்குச் செல்லாமல் நாள் தோறும் தனது அய்ரீஸ் உறவுக்காரர்களோடு சாண்ட்விச் பார்டி நடத்தி ஆடல் பாடல் என்று வாழ்ந்து வந்தார். ஆகையால் தான், அவரது உண்மையான பெயர் காணாமல் போய் *த சாண்ட்விச் பார்டி மேன்* என்ற பெயரே நிலைத்துவிட்டது.
சாண்ட்விச் பார்ட்டி பில் பெண்டிங்
மேடம் டுங்கன் முதல் முதலாக த சாண்ட்விச்
பார்டிமேன் வீட்டிற்குச் செல்கிறார். அப்போது பார்டி முடிந்த நேரம் அடுக்கடுக்காக சாண்ட்விச் கொண்டுவந்த காலி அட்டைப் பெட்டிகள் அறை முழுவதும் கொட்டி கிடக்கிறது.
மேடம் டுங்கன் சென்று குழந்தைகளின் நிலையைக் கூறி உதவி செய்யுங்கள், இனாமாக வேண்டாம் மீண்டும் விடுதிகள் திறந்த பிறகு வரும் வருவாயில் உங்களுக்குத் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.
இதற்கு த சாண்ட்விச் மேன், பதில் கூறுகிறார்.
மன்னிக்கவும் சாண்ட்விச் பார்டிக்காக பில் பெண்டிங் இருக்கிறது. ஏற்கனவே நடந்த பார்டி பில் கட்டமுடியாமல் இருக்கிறேன். இப்போது மீண்டும் ஒரு பில் வந்துவிட்டது. என்ன செய்ய எனது உறவுகள் ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களது மனம் நோகக்கூடாது என்று நான் பில் கட்டி வந்தேன். இப்போது பல பில் பாக்கி உள்ளது.
ஆகவே வேண்டுமென்றால், சில அட்டைப் பெட்டிகளில் மீதமுள்ள சாண்ட்விச் உள்ளது கொண்டு செல்லலாம். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்லும் இடைவெளியில் அந்தக் குழந்தைகளின் பசிக்கு உதவக்கூடும் என்று கூறிவிடுகிறார். (Sorry, there’s a pending bill for a sandwich party. I haven’t been able to pay the bill for a previous party, and now another bill has come up. What should I do?
My relatives keep placing orders, and to avoid hurting their feelings, I’ve been paying the bills. Now, several bills are pending.
If you needed, could take the leftover sandwiches in some cardboard boxes. By asking for help from others, during the gap, it might help feed the hungry children.
மேடம் டுங்கன் புன்னகை மாறாமல் கனத்த இதயத்தோடு திரும்பி விடுகிறார்.
இந்த நிலையில் சாண்ட்விச் பார்டிமேனின் வீட்டிற்குப் பின்புறம் பல நாட்களாக நடந்த பார்டியின் போது மீதமுள்ள சாண்ட்விச் அட்டைப் பெட்டி நிறைய கொட்டிக் கிடந்துள்ளது.
பசியில் ஜெனியின் சகோதரன் அவற்றில் சிலவற்றைக் கொண்டுபோய் அழுதுகொண்டு இருந்த தங்கைக்குக் கொடுத்திருக்கிறான்.
அந்த சாண்ட்விச் வீசப்பட்டு நீண்ட நாள் ஆனது கெட்டுப்போய் நஞ்சாக மாறி இருந்தது. ஆனால் *ஜெனி* பசியில் சாப்பிட்டுவிட்டாள் இதனால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பச்சிளம் குழந்தை இறந்து விடுகிறது. தனது சகோதரி இறந்தது தெரியாமல் வயிறு நிறைந்து தூங்குகிறாள் என்று நினைத்துக்கொண்டு அந்தச் சிறுவனும் கெட்டுப்போன சாண்ட்விச் சாப்பிட்டு விடுகிறான். அவனும் சில நிமிடங்களில் இறந்து விடுகிறான். தாமதமாக இதைப் பார்த்த ஓரான் அங்கிருந்த மீதமுள்ள கெட்டுப்போன சாண்ட்விச்சைத் தூக்கி வீசி விடுகிறான்.
மேடம் டுங்கன் அருகில் உள்ள பண்ணையில்
குதிரைகளுக்கு லாடம் அடிக்க உதவும் பணியைச் செய்துவிட்டு அதில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு ரொட்டியும் வேகவைத்து சீஸ் கலக்கப்பட்ட உருளைக்கிழங்கும் வாங்கிக்
கொண்டு இரவு தாமதமாக திரும்புகிறார். ஆனால், அழகிய ஜெனியும் அவரது சகோதரனும் இறந்து கிடக்கிறார்கள்.
இதில் மற்றொரு உண்மை என்னவென்றால், *ஜெனி* அவரது சகோதரனின் பெற்றோரும் அயர்லாந்தில் இருந்து வந்தவர்கள் தான்.
மறுநாள் இறுதிச்சடங்கு நடக்கிறது, அய்ரீஸ் மக்கள் சிலர் அதில் கலந்துகொள்கின்றனர். அதில் த சாண்ட்விச் பார்டி மேனும் ஒருவர்.
அவர் தன்னோடு அமர்ந்திருந்த ஒருவரிடம் கூறுகிறார்.
சாண்ட்விச் பார்டி பில் மட்டும் பெண்டிங்
இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது உதவி செய்திருப்பேன் என்று கூறுவதோடு ‘மேடம் டுங்கன்’ பற்றிய கட்டுரை நிறைவு பெறும்.
இந்தக் கட்டுரை வெளியான சில ஆண்டுகளில் அமெரிக்காவின் அத்தனை நாளிதழ்களும் தொடர்ந்து மறுபதிப்புச் செய்தன.
அதன் விளைவு அமெரிக்கர்கள் தாங்
களாகவே தங்களின் வீடுகளின் முன்பு உணவு பெட்டியை உருவாக்கி பசியோடு இருக்கும் நபர்களுக்கு வைக்கத் துவங்கினர். w