“க |
னவு வெளி – 2007” என்னும் தலைப்பில் புத்தக அட்டைகள் வடிவமைப்புக் காட்சி சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி அரங்கில் நடைபெற்றது. 19.2.2007 அன்று இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பாராட்டினோம். இதில் 500 புத்தக அட்டைகளின் வடிவமைப்புப் படிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தோழர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரையாற்ற, வடிவமைப்பாளர் விஜயன் முன்னிலை வகித்தார். நம்முடன் திட்டக்குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை நம் விடுதலை அச்சக மேலாளர் க.சரவணன், வடிவமைப்பாளர்கள் அய்சக், ஜாகிர், கார்த்தி, ரமேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டின் மூத்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.இராமச்சந்திரா அவர்கள் 21.2.2007 அன்று மறைந்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்தோம். இவர் அறிவாசான் தந்தை பெரியாரின் மருத்துவர். தந்தை பெரியாரின் இறுதி 15 ஆண்டுகளுக்கு இவரே முதன்மை மருத்துவர். டாக்டர் குருசாமி(முதலியார்) டாக்டர் ரத்னவேல் சுப்ரமணியம், டாக்டர் சடகோபன், டாக்டர் சுந்தரவதனம் ஆகியோருக்குப்பின் தந்தை பெரியாரின் உடல்நலத்தைக் காப்பதில் பெரும் பங்கு வகித்தவராவார்.
கடல்போன்ற மருத்துவ அறிவும் அனுபவமும் வாய்ந்தவர். இவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதன்மைக் கண்காணிப்பாளராக இருந்தபோது பல புதிய துறைகளை உருவாக்கி எளிய மக்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சை கிடைக்க உதவியவர். குறிப்பாக ஹீமோதெரபி என்ற பிரிவு உருவாகக் காரணமாக இருந்தவர்.
நம் பெரியார் மருத்துவமனையின் கவுரவ ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
அவரது உடலுக்கு அன்று காலை இறுதி மரியாதை செலுத்தினோம்.
தஞ்சையில் மேனாள் அமைச்சரும் சுயமரியாதை வீரருமான அன்பில் தருமலிங்கம் அவர்களின் பேரனும் அன்பில் பொய்யாமொழி அவர்களின் மகனுமான மகேஷ் – ஜனனி திருமணம் 22.2.2007 அன்று கலைஞர் தலைமையில் நடைபெற்றது. கலைஞர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நாம் பங்கேற்று வாழ்த்தினோம்.
அன்று மாலை நடைபெற்ற பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் ஆகியவற்றின் ஆண்டு விழாவிற்கு தலைமை வகித்தோம். இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி சார்பில் “Periyar tech.meg.” “Bio Chemistry-1” ஆகிய ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டன.
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்
குலேஷன் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா 27.2.2007 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தலைமை வகித்தோம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று கல்வெட்டினைத் திறந்து வைத்தார். அன்று மாலை மழலையர்களுக்குப் பட்டமளிக்கும் விழாவில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினோம். மறுநாள் (28.2.2007) அன்று சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினோம். தமிழ்த்துறைத் தலைவர் மோசஸ் மைக்கேல் பாரடே உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சையில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விளக்கி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினோம். இக்கூட்டத்தில் தஞ்சை சோமசுந்தரம் எழுதிய ’பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.இராதா’ என்னும் புத்தகத்தை வெளியிட்டோம்.
மதுரையில் திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாடு 3.3.2007 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில இளைஞரணி அமைப்பாளர்
க.சிந்தனைச்செல்வன் தலைமை வகித்தார்.
தஞ்சை கோட்ட இளைஞரணிச் செயலாளர்
சிவக்குமார் கொடியேற்றினார். மாநாட்டில்
பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன. நாம் நிறைவுரையாற்றுகையில் 130 இடங்களில் ராமராஜ்ய உண்மை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தோம். அதன்படி கூட்டங்கள் நடைபெற்றன. மாபெரும் எழுச்சிப் பேரணியும் கருத்தரங்கமும் நடைபெற்றன.
நம் தொடர் வேண்டுகோள்கள் காரணமாகவும்
தமிழ்நாடு அரசின் உண்மை அக்கறையாலும் இயற்றப்பட்ட நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.
6.3.2007 அன்று காலை பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு கோ சூ கூன் துணைத்தூதர் ரோஸ்லி இஸ்மாயில் பினாங்கு அமைச்சர் தென்ஹக்நம ஆகியோர் பெரியார் திடலில் நம்மைச் சந்தித்து வரவேற்று உரையாடி அனுப்பி வைத்தோம். அன்று மாலை ‘ஈழத்தில் நடைபெறுவது என்ன?’ என்னும் தலைப்பில் பெரியார் திடலில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன் உரைக்குப்பின் நாம் உரையாற்றுகையில் மனிதப் படுகொலை செய்யும், தமிழர்களைப் பட்டினிபோட்டுக் கொல்லும் இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர்
கோட்ட அமைப்புத் தலைவர் போன்ற பொறுப்பு
களில் இருந்து தொண்டாற்றிய பெரியார்
பெருந்தொண்டர் தூத்துக்குடி சா.காளிமுத்து
7.3.2007 அன்று மறை
வுற்றார். இவர் தென்
மாவட்டங்களில் இயக்கப்
பணிகளுக்குத் தூணாக
இருந்தவர். குற்றாலத்தில்
ஆண்டுதோறும் நடை
பெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் தங்கி முகாம் சிறக்க உறுதுணையாக இருந்தவர். கழகக் கட்டுப்பாட்டின் உரைகல்லாகத் திகழ்ந்தவர். தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலையை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். அவரது மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியுற்ற நாம், அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.
அன்று காலை தஞ்சை தச்சூர் கூட்டுசாலை
யில் தோழர் முருகன் (எ) இரணியர் – ஏ.கவுரி ஆகியோர் திருமணத்தை நடத்திவைத்தேன்.
தஞ்சையில் 8.3.2007 பெரியார் மணியம்மை
பொறியியல் கல்லூரி ஆய்வுக் கூடத்தில்
உருவாக்கப்பட்ட பயோ டீசலைப் பயன்படுத்தி
நீர் இறைக்கும் மோட்டார் செயல்படுவதைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினோம். உரத்த
நாட்டில் கை.முஅறிவுச்செல்வன் – வனிதா
திருமணத்தையும் நடத்தி வைத்து, சுயமரி
யாதைக் கொள்கைகளை விளக்கிப் பேசினோம்.
ஒன்றிய அரசு நடத்தும் அய்.அய்.டி.,
அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்
களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சிலர் வழக்குப் போட்ட நிலையில், அதற்கு எதிர்வழக்
காடும் மத்திய அமைச்சர், அரசுக்காக வாதாடும்
வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்
களாக இருக்கிறார்களே என்பதைச் சுட்டிக்
காட்டி கவனமாக இருக்கவேண்டும் என்று 9.3.2007 அன்று அறிக்கை வெளியிட்டோம்.
அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று சென்னை திருவொற்றியூரில் பெண்கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு
இனநலம் இசைக்குழு
கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாட்டில் பங்கேற்று உரை
யாற்றியபோது சுயமரி
யாதை வீராங்கனை
களான பட்டம்மாள் பாலசுந்தரம், ஹேமலதா தேவி ஆகியோரது தன்னலம் பாராத தொண்டை நினைவு கூர்ந்தோம். மாநாட்டில் தனியார் துறைகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியுடன் மாலை நடைபெற்ற விழாவில் ஒன்றிய அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கு.ம.ராமாத்தாள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
புதுடில்லியில் 13.3.2007 அன்று காலை மத்திய மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மத்திய வனத்துறை அமைச்சர் ஆ.ராசா, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த “விஸ்வ சூத்ரா மகாசபை” பொறுப்பாளர்கள் ஜே.பி.பாபு, எஸ்.எல்.வர்மா, எச்.பி.வர்மா,
எஸ்.பி.லால், பொறியாளர் பிரதீப் குமார், ஜி.எஸ்.படேல் ஆகியோரைச் சந்தித்து உரையாடினோம்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 13.3.2007 அன்று புதுடில்லி வி.கே.கிருஷ்ணமேனன் பவனில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய மாநாடு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கே.எர்ரன் நாயுடு (தெலுங்கு தேசம்) தலைமை வகித்தார். மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தொடக்க உரையாற்றினார்.
டி.ராஜா(சி.பி.அய்), வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எம்.பி., டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., பேரா.எம்.ராமதாஸ் எம்.பி., டாக்டர் செந்தில் எம்.பி., வழக்கறிஞர் ஏ.சுப்பாராவ், பேரா.ரவிவர்ம குமார், வி.நாராயணசாமி எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி இணைப்புரை வழங்கினார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினோம். பின்னர் அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் திரு.மோகன் அவர்களைச் சந்தித்து இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளது பற்றி கலந்துரையாடினோம்.
புதுடில்லி பெரியார் மய்ய கட்டுமானப் பணிகளை 14.3.2007 அன்று காலை பார்வையிட்டோம். இந்தியப் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சேனல் எடமருகு எம்மைச் சந்தித்து பகுத்தறிவாளர் கழக மாநாடுகள் நடத்துவது குறித்து உரையாடினார்.
மாலை ‘ரயில் பவனத்தில்’, தொடர் வண்டித்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்களை இணை
யமைச்சர் ஆர்.வேலு அவர்களுடன் சென்று சந்தித்து, சிறந்த நிதிநிலை அறிக்கை அளித்தமைக்கும், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கும், முக்கிய பல்கலைக்
கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக வகுப்பெடுப்
பதற்கும் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்தோம்.
டில்லிப் பயணம் பரபரப்புமிக்கதாகவும், பயன் மிகுந்ததாகவும் அமைந்தது.
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி ஆண்டு விழா 16.3.2007 அன்று காலை நடைபெற்றது. அதில் பங்கேற்று கல்லூரி வரலாற்றை நினைவு கூர்ந்து உரையாற்றினேன். மேலும் இக்கல்லூரியின் பெரியார் சிலைத் திறப்பு விழாவில் இரண்டு புதிய பல்கலைக் கழகங்களைக் கலைஞர் அறிவித்தார்
என்பதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினேன். அங்கு கல்லூரி திராவிட மாணவர் கழகத்தால் அமைக்கப்பட்ட தகவல் பலகையைத் திறந்து வைத்தோம். அன்று மாலை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் மணியம்மை திருமணம் புத்தகத்தை வழக்கறிஞர் டி.பானுமதி வெளியிட முதல்படியை நாகம்மையார் குழந்தைகள் இல்ல காப்பாளர் தாங்காத்தார் அவர்களும், இரண்டாவது பிரதியை ஞானசெப்ஸ்தியன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை 3 தொகுதிகளைத் திருச்சி சிவா வெளியிட ஞானராஜ் பெற்றுக்கொண்டார்.