10க்குக் குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தடை செய்யச் சட்டம் வந்தபோது அதனை எதிர்த்து பச்சை வர்ணாசிரமவாதிகளான M.K ஆச்சாரியார், T.V. கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற பார்ப்பனர்tகள் எல்லாம் சிம்லாவில் இருந்த அரசாங்கத்தின் உள்நாட்டு மெம்பரை (Home Member)ச் சந்தித்து குழந்தை மணத் தடைச் சட்டம் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டனர் என்பதும், அப்போது இருந்த சங்கராச்சாரியார் 12 வயதுக்குப் பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்தால் மதமே கெட்டுப் போகும் என்று வைசிராய்க்குத் தந்தி கொடுக்கச் செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியுமா?
