கொள்கை விழா!

டிசம்பர் 16-31

தந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியே. பிறந்தநாள் என்றாலே யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கியே இருந்த ஆசிரியர் 75 ஆவது பிறந்தநாளில் தான் தொண்டர்களின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டார்.

இப்போது 80 ஆவது பிறந்தநாளில் பல்லாயிரம் தொண்டர்கள் வாழ்த்துரைக்க கொள்கை விழாவாகவே டிசம்பர் 2 களைகட்டியது.

 

காலை 9 மணிக்கு பெரியார் நினைவிடம் அருகே மரக்கன்று நடும் நிகழ்வோடு தொடங்கிய விழாவில் மதியம் 1 மணிவரை ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள், இன உணர்வாளர்கள்,திராவிட இயக்க ஆதரவாளர்கள் என குவிந்தனர்.பிறந்தநாள் நாயகர் தி.க.தலைவர் கி..வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சால்வைகள், மாலைகளைத் தவிர்த்து பெரியார் தொண்டர்கள் பாதுகாப்பு நிதிக்கு 5 இலட்சம் ரூபாய் நன்கொடை திரண்டது. குருதிக்கொடை, மருத்துவ ஆலோசனை,புற்று நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனை உள்ளிட்ட மனிதநேய முகாம்கள் நடந்தன.

மாலை ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் தமிழமுதன்,யுகபாரதி,கருணாநிதி ஆகியோர் கவிமாலை சூட்டினர்.

தொடர்ந்து தி.க.பொருளாளர் கோ.சாமிதுரை தலைமையில், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்க, தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற பாராட்டரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பாராட்டிபேசினர். டாக்டர் கலைஞர் அவர்கள் தனது உரையில், பெரியாருக்குப் பிறகு, அவர் வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் எல்லாம்; இப்படிப்பட்ட அறக்கட் டளைகள் எல்லாம் என்ன ஆகுமோ? என்று இருந்த கேள்விக்குறிக்கு ஒரே பதில் ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஒளிமிகுந்த முகத் தைக் காட்டியவர் தான் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் ஆவார்கள்!

அவர்களைப் பெற்றிருக் கின்ற இந்த இயக்கத்திற்கு  திராவிட இயக்கத்திற்கு எந்த அழிவும் எப்போதும் நேர்வதற்கு இடமில்லை. என்னையும் வெல்லக் கூடிய அளவிற்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நானே மூக்கில் விரல் வைக்கின்ற அளவிற்கு மிக அற்புதமான அறப்பணிகளை தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அன்னை மணியம்மை அவர்களின் பெயரால் ஆங்காங்கு  ஆக்கியிருக்கிறார். அங்கிங் கெனாதபடி எங்கெங்கும் வீரமணி அவர்களுடைய ஆற்றல் பளிச்சிடுவதை, ஒளிவிடுவதை, பிரகாசித்துக் கொண்டிருப்பதை  நான் காணுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விட வேண்டுமென்று  எதிரிகள்  இன்றைக்கு முற்படு வார்களேயா னால், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய  கேடயமாக திராவிடர் கழகம்,  தளபதி வீரமணி அவர்களுடைய தலைமையிலே இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டு மென்று விரும்புகின்றவர்கள் ஜாக்கிரதை  என்று தான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.நான் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்க ளுடைய  பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன்.  இனி பத்தாண்டு காலத்திற்கு மேல்  சாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே  யாரையும் ஏமாற்ற முடியாது.  ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.

நான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க் கிறேன்.    திராவிட முன்னேற்றக்  கழகத்திலே இன் றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன்.   அந்த இளைஞர் அணியினர் இன்றைக்கு வேகமாக  விறுவிறுப்பாக  திராவிட இயக்கத் தின் கொள்கைகளை,  சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக் கூடிய வீராதி வீரர்களாக,  இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின் றேன். அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு,  இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகி விடுவார்களேயானால் பிறகு சாதிக்கு வேலையே இல்லை. ஜாதியை முன்னிறுத்தி இனி யாரும் அரசியல் நடத்த முடியாது – தருமபுரிகள் நடை பெறாமல் தடுக்கப்பட நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட வேண்டும், என்று உணர்ச்சிமயமான கொள்கைப் பிரகடனத்தை எடுத்துரைத்தார்.

ஏற்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள் தனது உரையில், நண்பர்களே, எங்களு டைய பிறந்தநாள் விழாக்கள் என்று கொண்டாடப் படுவதோ, இது வெளிச்சம் போட்டு எங்களைப் பாராட்டவேண்டும் அல்லது பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. பாராட்டைக் கேட்பதைவிட எங்களுக்குக் கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது.

சுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய எங் களைப் போன்றவர்களுக்குப் இந்தப் பாராட்டு களைக் கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே அது மிகக் கடினம். வழக்கமாக அதைக் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல,

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக இருக்கும். அந்த நாணயத்திற்கு இன்னும் பாது காப்புக் கவசமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இருக்கும் என்பதுதான் மிக முக்கியம்.

இந்தக் காலகட்டத்தில் ஒன்று மிக முக்கியம் – ஜாதீயம் மீண்டும் தலைவிரித்தாடக் கூடிய நிலை யிலே இருக்கிறது. கொசுவை யாகம் செய்து ஒழித்து விடலாம் என்று நினைக் கிறார்கள். அவர்கள் கொசுவை ஒழிப்பார்களா? நீங்கள்  நன்றாக  நினைத்துப் பார்க்கவேண்டும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், அய்யா ரொம்ப காலத்திற்கு முன்னாலே இந்தத் தத்துவத்தை சொன்னவர்.

ஜா(தீ)தி என்று சொன்னால், அது முழுக்க முழுக்க பார்ப்பனர்  கொசுக்கள் மூலம் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்றால், இந்து மதம் என்ற சாக்கடையில் இருந்து உரு வாகிறது. அந்தச் சாக்கடையைத் தூர்க்காத வரையிலே, இந்தக் கொசுக்கள் இருக்கின்ற வரையிலே ஜாதியை ஒழிக்க முடியாது.  ஆகவேதான், எனக்கு ஒன்றும் தனிப் பட்ட முறையில் அந்த வருணத்தின் மீது கோபம் அல்ல. அவதிப்படுகிறார்களே என்று சொன்னார்.

இன்றைக்கும் ஜாதிக் கொசுக்கள், ஜாதீயம் அப்படித்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சல் வந்து ஏன் உயிரிழப்பு ஏற்படு கிறது? கொசுக்களை அழிக்கவேண்டும். கொசுக் களை அழிப்பதற்கு யாரும் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.

இந்தத் திராவிடர் இயக்கத் திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று அன்றைக்கு கிராமத்தில் ஒதுக்குவார்கள். அது எங்களுக்குப் பெருமை. அதைவிட பெரிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு வேறு கிடையாது. ஏனென்றால், யார் ஒடுக்கப்பட்ட வனோ, யார் அழிக்கப் படவேண்டியவன் என்று மற்ற ஆதிக்கக் காரர்கள்  நினைத்தார்களோ அவர்களுக்குத் தோள் கொடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

ஆகவேதான், எங்களுடைய திட்டங்கள் வேக வேகமாக அடுத்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பதை நோக்கிப் போகும் – 80 வயது ஒரு பொருட்டல்ல – 90 வயது ஒரு பொருட்டல்ல – எங்களுடைய உள்ளமும், உறுதியும்தான் பொருட்டு என்பதற்கு இந்த இயக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்

இளைஞர்களே வாருங்கள்! இந்த அனுபவம் பேசும்; முதிர்ச்சி கைகொடுக்கும். அந்த வகையிலே தான் இனிமேல் ஒரு புதிய திட்டத்தைப் போட்டாக வேண்டும். அது தேர்தலைப் பொறுத்தது அல்ல; அடுத்த தலைமுறையைப் பொறுத்த திட்டமாக, மானமுள்ள மக்களாக நம் மக்களை ஆக்கவேண்டும். திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவோம் என்று சொன்னார் களே, அதனை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையிலே சமூகநீதி என்ற அளவுக்கு ஜாதி அளவுகோல் தேவை. அதை வைத்துத்தான் நம்மை அழித்தார்கள் அதிலே. எப்படி ஒரு நோய்க் கொல்லி மருந்திலே ஆண்டிப யாடிக் என்று கொடுக்கக்கூடிய மருந்திலே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுப் போமோ, அதே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்தால்தான், அந்தக் கிருமியைக் கொல்லும். அந்த மருந்தில் பாய்சன் என்று போட்டிருப்பார்கள். அதுமாதிரி ஜாதி விஷம்தான்; ஆனால், அதை இட ஒதுக்கீட்டிற்கு அளவாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
அதை பலர் இன்று அந்த விஷத்தையே முழுமையாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதனை நம் இயக்கம்தான் பிரச்சாரத்தின்மூலம் தெளிவுபடுத்த முடியும். ஜாதியை அழிப்போம்; இட ஒதுக்கீட்டிற்கு அதை எந்த அளவிற்குப் பயன்பட வேண்டுமோ அதற்கு மட்டுமே அந்த அடையா ளங்கள்; அதுவும் நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருவோம் என்ற பெரியார் தத்துவத்தை, திராவிடர் இயக்கத் தத்துவத்தை, சமூகநீதி தத்துவத்தை எடுத்து தெளி வாக முன்வைப்போம் என்பதுதான் மிக முக்கியம். என்று குறிப்பிட்டு, தனது பிறந்தநாள் விழாவில் பெரியாரின் அடிப்படை இலட்சியமான ஜாதி ஒழிப்புக்கு போர் முரசம் கொட்டும் களமாக மாற்றியமைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *