Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சிந்தனைகள்

எனது விருப்பம் :

கடந்த 17, 18 ஆண்டுப் பொதுவாழ்வில் எனக்கு எப்போதும் இம்மாதிரி தலைமையேற்க வேண்டும். மக்களிடத்தில் விளம்பரம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. எனக்கு அதில் விருப்பமில்லை. நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது, காடுமேடு சுற்றி மக்களுக்குப் பகுத்தறிவு போதித்து வரும் நம் தந்தை பெரியாரின் பக்கம் இருந்து அவருக்குத் தொண்டு செய்வதே எனது விருப்பம்.
-‘விடுதலை’ 31.3.1950.

பெரியார் பாதை :

மக்களுக்கு உணவு, உடையும்தான் முக்கியம். தொழிலாளர்கள் நிலை சீர்பெற வேண்டுமானால் பெரியார் அவர்கள் பாதை வழியே ஒற்றுமை, கட்டுப்பாடு, கண்ணியம் ஆகியவற்றைக் கைக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
-‘விடுதலை’ 5.10.1953.

தமிழர்களின் சொத்து:

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து. பொதுச் சொத்து நாதி அற்றதாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டு விடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப்பாற்றுவது போல் கவலையுடன் காப்பாற்றியாக வேண்டும்.
-‘விடுதலை’ 8.6.1958.

கழகத்தின் உயிர்:

பத்திரிகைப் பலத்தையோ. பணம் படைத் தவர்கள் ஆதரவையோ, பெரிய மனிதர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டவர்கள் தயவையோ, நாடியும், தேடியும் வளர்ந்ததல்ல நமது கழகம் நமது கொள்கைகளிலே இருக்கிற நியாயங்கள், நமது கொள்கைகளிலே இருக் கின்ற உண்மைகள், இவைகளால் கவர்ந்து இழுக்கப்பட்ட கழகத் தொண்டர்கள் செயல் வீரர்கள் ஆகிய பலன் கருதாத, பின் விளை வினைக் கண்டு பயப்படாத பணியாளர்களின் அயராத உழைப்பினாலே உருவானதாகும் இந்தக் கழகம். அத்தகைய அருந்தொண்டர் கள்தான் இந்தக் கழகத்திற்கு உயிர், உடை மையாகும்.
-‘விடுதலை’ 5.4.1974

கருஞ்சட்டை:

நாம் அணியும் கருஞ்சட்டை நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூட நம்பிக்கையை ஒழிப் பவர்கள், ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதோடு, அவர்கள் எல்லாம் பெரியாரின் தொண்டர்கள் என்கிற வகையில் பாராட்டுவார்கள்.
-‘விடுதலை’ 28.5.1974.

பெண் அடிமை போக:

சுயமரியாதைத் திருமணத்தின் மூலம்தான் பெண் அடிமை போக்கிக் கொள்ள வழிவகை ஏற்படுகின்றது. பெண்களுக்கும், ஆண்களைப் போல சம உரிமை
கள் அளிக்கவேண்
டும் என்று வற்
புறுத்தப்படுகின்றது.
-‘விடுதலை’ 9.9.1974.

நமது இயக்கம் :

தந்தை பெரியாரின் இயக்கம் தன்னல
மற்றது. யாரும் தகர்த்தெறிய முடியாதபடி, அசைக்க முடியாத உண்மைத் தொண்டர்களைக் கொண்ட பெரும் இயக்கம். தொண்டுக்கும். உழைப்புக்கும்தான் மதிப்பும், மரியாதையும். அதை அளிக்க மனம் வராதவர்களுக்கு இதில் இடமே இருக்காது. லாபம், பெருமை பெறுவது அல்ல நமது இயக்கம் என்பதைத் தந்தையின் மொழியிலேயே சொல்லி, உங்கள் கவனத்தில் வைக்கிறேன்.
-‘விடுதலை’ 17.12.1974.

நமது உறுதி:

குழந்தையே இல்லாத தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு “சூத்திர பஞ்சமர்கள்” அனைவரையும் தமது சொந்தக் குழந்தை களாகக் கருதி, தமக்கென்று ஒன்றும் இல்லா மல் தம் தளராத முயற்சியால் ஈட்டிய தனம், தன் சிக்கன வாழ்க்கையால் சேமித்த பொருள் எல்லாவற்றிற்கும் “சூத்திர பஞ்சம்”க் குழந்தை களையே வாரிசாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். தமக்கென வாழா அந்தப் பெருந்தகையாளரின் பேரன்புக்குப் பாத்தியப் பட்ட பெரியார் தொண்டர்களாகிய நாம், அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற பணியை, அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல், ஒற்றுமையாக, கட்டுப்பாடாக இருந்து செயல்படுவோம் என்ற உறுதியினை எடுத்துக் கொண்டு பணியினைத் தொடருவோம்.
-‘விடுதலை’ 10.1.1974.

நமது தொண்டு:

மக்களுக்குத் தேவையான தொண்டை நாம்தான் செய்து வருகிறோம். நாம் செய்து வரும் பிரச்சாரமும், தொண்டும் ஒரு கட்சிக்காக செய்யப்படுவதல்ல; ஒரு இனத்திற்காகச் செய்யப்
படும் தேவையான பொதுத் தொண்டே நமது தொண்டாகும்.
-‘விடுதலை’ 27.1.1974.

இழப்பு:

தந்தை பெரியார் அவர்களின் இழப்பு தனிப்பட்ட இழப்பல்ல; தனிப்பட்ட இழப்பு என்றால் சில நாளில் சரியாகி விடும். ஆனால், இது பொது இழப்பு. ஒரு இனத்தின் இழப்பு.
-‘விடுதலை’ 27.1.1974.

அடிப்படைக் காரணம்:

நம்நாட்டுப் பெண்கள் சமுதாயத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் பெரும் பாடுபட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஓரளவிற்குப் பெண்கள் முன்னேற்றம் பெற்று இருக் கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் நமது அருமை அய்யா அவர்கள் ஆவார்கள்.
-‘விடுதலை’ 27.1.1974.

நமது கவசம்:

ஜாதியற்ற சமுதாயம் மூடநம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு லட்சியம் இல்லை என்பது நமது துணிவும். தெளிவும் தரும் கொள்கைக் கவசங்களாகும்.
-‘விடுதலை’ 8.7.1975.

சிலையின் தத்துவம்:

ஒருவருக்கு ஒரு சிலை எடுக்கிறோம் என்றால்
அதன் தத்துவம் என்ன? அந்தச் சிலைக்குரிய
மனிதரின் சிறந்த சாதனைகளையும், தொண்டு
களையும், அந்தத் தொண்டால் மனித சமுதாயம்
பெற்ற பலாபலன்களையும் நாளைய உலகிற்குச் சுட்டிக்காட்ட எழுப்பும் வரலாற்றுச் சின்னம்தான் சிலையாகும்.
-‘விடுதலை’ 22.9.1975.

எங்கள் கவலை:

அரசியல் கட்சிகளுக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய பெருங்கவலை. திராவிடர் கழகத்திற்கோ வாழ்கின்ற தலைமுறையையும், அதற்கடுத்த தலைமுறையையும் பற்றியே முக்கியக் கவலையாகும்.
-‘விடுதலை’ 24.4.1976.