முகநூல் பேசுகிறது

டிசம்பர் 16-31

விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோவிலில் வழிபட உரிமை இல்லை.

– தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை!
#புலித்தோலை போத்திகிட்டு சுத்திகிட்டிருக்கிற சிவபெருமானையும் கோவிலுக்குள்ள வுட்ராதீங்க ஆபீசர்ஸ்..

அதிஷா வினோ 5 டிசம்பர் 2012, இரவு 9:57 மணி

சென்னையில் இருந்து கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்-ரெயில்கள் மின்சார வசதி குடிநீர் வசதி சாலை வசதிகள் போன்றவைகளை செய்து தர வக்கில்லை… இதுமட்டும் உடனே நிறைவேற்றப்படும். என்னமோ போடா மாதவா!

பரணீதரன் கலியபெருமாள் 21 நவம்பர் 2012, அதிகாலை 2:03 மணி

நான்-Violence Non–வயலன்ஸ்

காதலும் திருமணமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அன்பு கலந்த வாழ்க்கை. அதற்கு எதிராக மருத்துவர் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட சாதித் தலைவர்கள் எல்லாம் ஆண்களாகவே இருந்தனர். அவர்கள் சாதியில் பெண்களே கிடையாதா? தங்கள் உரிமைகள் குறித்து அவர்கள் பேசுவதற்கு அனுமதி கிடையாதா? அல்லது அந்தப் பெண்களுக்கு இந்த சாதித் தலைவர்களிடமே பாதுகாப்பு இல்லையா?

கோவி.லெனின் 3 டிசம்பர் 2012, காலை 8:56 மணி

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க போகிறதோ அது நன்றாகவே நடக்கும் – கீதை
தர்மபுரியில் நடந்ததும், நடக்கிறதும் நன்றாக இல்லை
நடக்க போவதாது நன்றாக இருக்க முதலில் இந்த கீதையை கொளுத்தி எரிய வேண்டும்…
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
என்னுடைய உழைப்பால் வந்த உடைமையை இழந்தேன் அழுகிறேன்
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
உழைப்பை நான் கொண்டு வந்தேன் – அவ்வுழைப்பால் என் சமூகத்தை நான் படைத்திருக்கிறேன் , அது வீணாயிற்று
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
சாதியும், தீண்டாமையும் இங்கிருந்தே எடுக்கப்பட்டதோ ??
அடக்குமுறையும் வன்முறையும் இங்கிருந்தே கொடுக்கப்பட்டதோ??….
அப்படியென்றால் முதலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கிருஷ்ணனை தான் கைது செய்ய வேண்டும்…

அருண் பகத் 17 நவம்பர் 2012, மதியம் 1:35 மணி

உலகச்செய்தி:

23 நவம்பர், 2012 _ சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்

தமிழக செய்தி:

23 நவம்பர், 2012 -_ தருமபுரியில் சாதி கலவரம்
——————————————————————————————————-உலகச்செய்தி:

23 நவம்பர், 2062 _ அமெரிக்க அதிபர் செவ்வாய் கிரகத்தில் உள்ள டொமெனிக்கா நாட்டிடம் வர்த்தக ஒப்பந்தம் செய்து விட்டு பூமி திரும்பினார்

தமிழக செய்தி:

23 நவம்பர், 2062 _ தமிழகமெங்கும் சாதிக்கலவரம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிகளின் மாநாட்டின் போது யார் ஆண்ட பரம்பரை என்று நிர்ணயிப்பத்தில் ஏற்ப்பட்ட வாய் தகராறு முற்றி அது சாதிக்கலவரமாக வெடித்துள்ளது.
——————————————————————————————————–

இன்னும் 50 வருடங்கள் அல்ல நூறு வருடங்கள் ஆனாலும் சாதிகள் இருக்கும் வரை நம் தமிழகத்தின் நிலை இப்படித்தான் இருக்க போகிறது

சபேசன் சண்முகசுந்தரம் 22 நவம்பர் 2012, பகல் 11:03 மணி

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் அவர்கள் கலப்புத் திருமணங்களை ( ஜாதி மறுப்புத் திருமணங்களை ) வன்மையாகக் கண்டிக்கிறார். அவர்கள் சாதிக்குள்ளாகவே தான் கல்யாணம் செய்து கொள்வார்களாம்.

அவருக்கு சில கேள்விகள் ;

உங்க ஆளுங்களுக்கு தவிச்சா மத்த சாதிக்காரங்க தண்ணி தரலாமா ?

ரோட்ல எங்கயும் உங்க ஆளுங்க அடிபட்டுக் கிடந்தா மத்த சாதிக்காரங்க தூக்கிட்டு போயி ஆஸ்பத்திரியில் சேர்க்கலாமா ?

மற்ற சாதிக்காரங்க ரத்தம் குடுத்தா ஏத்துப்பீங்களா ?

உங்க தெருவை இனி உங்க சாதிக்காரங்களே சுத்தம் செய்து கொள்வீர்களா?

காய்கறி மளிகையெல்லாம் வேற சாதிக்காரங்க கடையில வாங்க மாட்டீங்களா ?

முடி வெட்டுறது உங்க சாதி ஆளுங்ககிட்டவே வெட்டிப்பீங்களா ?

செருப்பும் உங்க சாதி ஆளுங்ககிட்டவே தச்சுப்பீங்களா ?

சாவுக்கு சங்கு ஊதறது – பாடை கட்டுறது – குழி தோண்டுறது அல்லது எரிக்கிறது இது எல்லாமே உங்க ஆளுங்கள வச்சே செஞ்சுக்குவீங்களா?

ஓவியச்செல்வன் 4 டிசம்பர் 2012, இரவு 11:22 மணி

 

செய்தி: கடந்த ஞாயிற்றுக்கிழமை முந்திரி, திராட்சை போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டதால், லட்டு வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ரூ.100க்கு 4 லட்டுகள் வழங்குவதற்கு பதில் ரூ.50க்கு 2 லட்டுகள் வழங்கப்பட்டது. இந்த திடீர் லட்டு தட்டுப்பாடு பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் பக்தர்கள் முறையிட்டனர்.லட்டு கவுன்டர்களை நேற்று முன்தினம் மாலை திடீர் ஆய்வு செய்தார். பின்னர் வழக்கம்போல் ரூ.100க்கு 4 லட்டுகள் வழங்க உத்தரவிட்டார்

சிந்தனை: 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 60 பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தால் கூட ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள்…ஆனால் லட்டு தட்டுப்பாடு என்று அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்….ஏண்டா ரேஷன் கடையில் அரசு மானியத்தில் கொடுக்கும் சக்கரை மண்ணெண்ணெய் தட்டுபாடு இருக்கு..அதுவும் 5 ஆம் தேதிக்கு பிறகு போனால் ரேசன் கட காரன் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு பீலா விடுவான்…..அதற்கு எதாவது முறையிட்டு வாங்க வக்கில்லை…..லட்டுக்கு முறையிட்டு லட்டு வாங்கி தின்கிராணுக….மக்கள் போக்கு இப்படியே போனா நாடு உருப்புற்றும்டா

பரணீதரன் கலியபெருமாள் 4 டிசம்பர் 2012, இரவு 9:45 மணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *