முற்றம்

டிசம்பர் 16-31 முற்றம்

இணையதளம்

www.thoguppukal.wordpress.com

தமிழ் எழுத்தாளர்கள் 794 பேர்களின் படைப்புகள்; அறிவியல், அறிஞர்கள், இசை, இலக்கியம், இலக்கணம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்; பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் தொடங்கி தற்கால இலக்கியப் படைப்புகள் வரை நீண்ட தொகுப்புகள் என பரந்து விரிந்த படிப்புலகத்தைப் பக்கங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. ஒவ்வொருவரின் படைப்பையும் தேடித்தேடிப் படிக்கவேண்டிய வாசகர்களின் சிரமத்தைக் குறைத்து ஒரே தளத்தில் பெரும்பகுதிப் படைப்பாக்கத்தைத் தந்திருப்பது சிறப்பு. மொழிப்பயிற்சிப் பகுதி இன்றைய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் அளித்திருப்பது பாராட்டுகுரியது.

 


 

தகவல் தளம்

www.india.gov.in

இது இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளம்.இந்திய அரசின் பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள், தரவுகள், நலத்திட்டங்கள், குடிமக்களுக்கான உதவிகள் என அனைத்தும் வழங்கும் தகவல் தளமாக உருவாக்கப்-பட்டுள்ளது. இங்கிலீஷிலும், இந்தியிலும் தனித்தனியே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.அரசின் அமைச்சகத் துறைகளுக்கான இணையதளங்களுக்கு இந்த தளத்தின் மூலமே செல்ல இணைப்புகள் அளிக்கப் பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றிய பொதுவான தகவல்கள் ஒரு மேலோட்டமான பார்வை, நாடாளுமன்றம்,மக்கள் பிரதிநிதிகள் பற்றியும் தனிப் பக்கங்களில் அளித்திருப்பது சிறப்பு.பொதுவாக ஒரு தகவலைப் பற்றி அறிய அரசு அலுவலகங்களை நாடாமல் இனி இந்தத் தளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம்,படிவங்கள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உண்டு.அரசு வெளியீட்டுத்துறையின் வெளியீடுகள் பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.

 


 

நூல் :

நீதிமன்றங்களில் தமிழ்

ஆசிரியர் : டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத்
வெளியீடு : சட்டக்கதிர் பதிப்பகம், 3/2.சுவாதி ராம் டவர்ஸ்,
3.துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-600 028. பக்கங்கள் 284 ரூ.400

உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாகத் தமிழை இடம்பெறச் செய்ய எடுத்த முயற்சிகளைப் பதிவு செய்திருக்கும் முக்கிய நூலாக இந்நூல் திகழ்கிறது.

வழக்குகளைத் தொடுப்போரும்.எதிர்வழக்காடுவோரும் அறிந்த தம் தாய் மொழியில் வழக்கு நடைபெறாமல்,அவர்கள் அறியாத அயல்மொழியில் வழக்கு நடக்கும் கொடுமை உலகில் அநேகமாக இங்குமட்டும்தான் நிகழும். வழக்குரைஞரும், நீதிபதியும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை வெறும் ஊமைப்படம் போலப் பார்க்கும் வழக்குத் தொடர்பாளர்கள் தமிழர்கள் மட்டும்தான். உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழைக் கொண்டு வரவேண்டிய அவசியத்தை இந்த நூல் சட்டபூர்வமாகவும், நியாயபூர்வமாகவும் எடுத்துக்காட்டுகிறது.உச்ச நீதிமன்ற,உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முன்னாள் அமைச்சர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரது கருத்துகளின் கோவையாக நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *