முகநூல் பேசிகிறது . . .

நவம்பர் 16-30

 

தங்கள் உயிர், குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துகளை நாம் தடுக்கலாம்….!

இன்று ஒரு தகவல்
_ november 10, 2012 , 10.53 am

செம்ம மேட்டர் மா இப்டி ஏழு நாள் செய்யனும்‘/november 10,2012 /10.51pm

 

தன்னோட கண்ணித்தன்மையே ஜப்பான் காரனிடம் பேரம் பேசிய மாணவிக்கும்,தன்னோட ஜாதி ஓட்டை வச்சிக்கிட்டு தேர்தல் நேரத்தில் பேரம் பேசும் ஜாதி கட்சிக்கும் பெரிய வித்யாசம் ஒன்னும் இல்லே

-S.p. Kani,november 9,2012/10.39 pm

 

ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்றால்….. இங்கிலாந்தில் பிச்சை எடுப்பவன் நம்மைவிட அறிவாளி!

திராவிடப் புரட்சி- november 9 , 2012 /10.09.pm

 

தீண்டாமை ஒழிப்பு மட்டுமல்ல, சாதி ஒழிப்பும் தேவைப்படும் காலம் இது. பெரியாருக்குப்பின் இதனை உறுதியாக முன்னெடுக்க யாரும் தயாராக இல்லை. இடஒதுக்கீடு என்பதுகூட இடைக்கால நிவாரணம்தான். சாதி ஒழிப்பே சமூக நீதியின் இறுதி இலக்கு. பூணூலை உடலிலோ மனதிலோ அணிந்துகொண்டு சாதி ஒழிப்பு பேசுவோர் தயவு செய்து தள்ளி நிற்கவும்

Govi Lenin – november 9, 2012 9.01 pm.

 

சிறுத்தைப்புலி நடமாட்டம் திருப்பதி மலைப்பாதைகளில் தனியாக நடந்து வர வேண்டாம் : தேவஸ்தான அதிகாரி எச்சரிக்கை
வெங்கி சக்தி வாய்ந்தவர் அவரிடம் சென்றால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லி பிரபலப்படுத்தி தானே மக்களை திருப்திக்கு வர சொல்லுரிங்க….சாதாரன சிறுத்தைப்புலி இடம் இருந்து ஏழுமலையான் மக்களை காப்பாற்ற மாட்டாரா? அப்போ எச்சரிக்கையா இருக்க வேண்டியது ஏழுமலையான் கிட்டதான்

Paraneetharan Kaliyaperumal / november 9,2012/3.56 pm

 

அய்யா இதே அயோ……த்திய ராமன் ……………தன் பொண்டாட்டிய கற்பானவள் என்று உறுதி படுத்த எரியிர தீயில் நிற்க சொன்னவன் என்பதை…. நம்மூர் இந்து அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டு தனது வீட்டில் சோதனை செய்வார்களா ?

Blackstartamilan Eevera /november 10,2012-11.31 am

 

தங்கள் அருள் மூலம் ஆத்ம பரிசுத்தம் செய்து தரும் ஜக்கி கடவுளும், தயானந்த கடவுளும் …

தங்கள் அருள் மூலம் ஊரில் உள்ள கழிவறைகளையும், கழிவுத்தொட்டிகளையும் ,

கழிவு கால்வாய்களையும் பரிசுத்தம் செய்தால் உண்மையில் துப்புறவுத் தொழிலாளியின் ஆத்மா இல்லாவடினும் உடலாவது சுத்தமாகும் ??

Arun Bhagath / november 9,2012/11.55.am

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *