(யானை படுத்தால்கூட குதிரை மட்டம் )கேள்வி – பதில்கள்

2024 ஆசிரியர் பதில்கள் டிசம்பர் 1-15 2024
1. கே: மராட்டிய மாநில தேர்தல் முடிவிலிருந்து இந்தியா கூட்டணி கற்க வேண்டிய பாடம் என்ன?
– கே.பாபு, தாம்பரம்.
ப: போதிய ஒருங்கிணைப்பு இன்மையும், அசாத்திய மெத்தனமும், சில போலிக் கருத்துக் கணிப்புகளால் உண்டாகும் மிதப்பும் கூடாது என்பதை உணரவேண்டும்.
2. கே: தனித்து நின்றால் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆட்சியமைக்க முடியாது என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களே கூறுவது சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு இடம் தருவதாகாதா?
-இ.பெருமாள், தி.நகர்.
ப: யானை படுத்தால்கூட குதிரை மட்டம் என்பதை மறந்தவர்களே இப்படிக் கூறமுடியும். தேவையற்ற பேச்சுகள் இவை தவிர்க்கப்படுதல் நல்லது.
3. கே: தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது, சனாதன எதிர்ப்பைத் திசை திருப்பிவிடும் என்ற திருமாவின் எச்சரிக்கையை எப்படிப் பார்க்கி றீர்கள்?
– கா.கோபால், அருப்புக்கோட்டை.
ப: சரியான கருத்து ஆகும்!
4. கே: தன் விருப்பத்திற்கு இணங்காத பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை தொடர்வது தடுக்கப்பட என்ன செய்ய வேண்டும்?
– ம.சுலோச்சனா, நாகப்பட்டினம்.
ப: கடும் தண்டனைதான் ஒரே வழி!
5. கே: படித்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்பதில் முனைப்புக் காட்டாது, ‘ரூட் தலை’, ‘ஏரியா தலை’ யார் என்று மோதி அழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
– தி.சாந்தி, பட்டினம்பாக்கம்.
ப: அரசு செய்தால் பலன் தராது.  மக்களுக்கும் புத்தி வரவேண்டும். ஊடகங்களின் இன்றைய  போக்கு மாறவேண்டும்.
6. கே: மோடியின் கூட்டாளி அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி இதை எப்படி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும்?
– க. பிரசன்னா, தூத்துக்குடி.
ப: அவரவர்களே செய்வார்கள். எதற்கெடுத்தாலும் நாம் ஏன் யோசனை கூறவேண்டும்?
7. கே: மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என்றும், ராகுல்காந்தி
யால்தான் தொடர் தோல்வி என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கூறுவது ‘இந்தியா கூட்டணி’யைச் சீர்குலைக்கும் செயல் அல்லவா? இதைத் தொடக்கத்திலேயே களைய வேண்டியது கட்டாயமல்லவா? பாசிச சக்தியை வீழ்த் தும் போரில் இப்படிப் பட்ட கோரிக்கை ஏற்புடையதா?
– கே.அசோக், பழைய வண்ணாரப்பேட்டை.
ப: அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்றுக்கு தேவையற்ற  முக்கியத்துவம் தரவேண்டாம்!
8. கே: பாசிசம், மதவெறி, அடித்தட்டு மக்களுக்கு எதிரான செயல் திட்டங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைச் சேவகம் என்று பல பாதக நிலைகள் இருந்தும், பா.ஜ.க.வை மக்கள் ஆதரிக்கும் நிலை உருவானதற்குக் காரணம், இந்தியா கூட்டணியின் பிரச்சார முறையும்,  ஒற்றுமையின்மையும் தானே?
– உ. காந்திமதி, மடிப்பாக்கம்.
ப: கைப் புண்ணுக்குக் கண்ணாடி  தேவையா?