சுமார் 55 வருடங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் “ராமவிலாஸ்” (பிராமணாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது. அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம். அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது. ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது.
அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு டைலர் சொக்கன் தலைமையில் அண்ணாதுரை வாலிபர் சங்கத்தினர், மனித மலத்தில் புளியந்தழையை கரைத்து, ராமவிலாஸ் ஹோட்டல் வாசல் முழுவதும் ஊற்றிவிட்டனர். வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த அய்யருக்கு துர்நாற்றம் குடலை பிடுஙக ஆட்களை கூப்பிட்டு எவ்வளவோ சுத்தம் செய்து பார்த்தும் நாற்றம் போனபாடில்லை. வெறுத்துப்போய் கடைசியில் ஒரு வாரத்திற்கு கடையை மூடிவிட்டார்! இது எங்கள் பகுதி பெரியார் தொண்டர்கள் சொல்ல கேட்டது.
இப்போது சீரங்கத்தில் ஒரு பார்ப்பான் “பிராமணாள் கபே” என்று போர்டு போட்டுள்ளானாம். தங்களை இழிவு படுத்துவதாக கூறி பலர் அந்த பெயரை மாற்றக் கோரியும் சட்டம் பேசிக்கொண்டு திரிகிறானாம். இதைப்படிக்கும் போது சுயமரியாதை உள்ள எவருக்கும் ஆத்திரம் பீறிட்டு எழுவது இயற்கைதானே…!
– மயில்.