முற்றம்

அக்டோபர் 16-31 முற்றம்

இணையதளம்: www.projectmadurai.org


பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புவோருக்கு மிகவும் பிடிக்கும் இணையதளம்.தமிழ் ஒருங்குறி (Unicode)யில் திருக்குறள் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை 415 மிக முக்கிய தமிழ் நூல்களின் தொகுப்புகளின் அணிவகுப்பு. மேலும் TSC II எழுத்துருவிலும் மற்றும் PDF வடிவத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டில் பொங்கலன்று தொடங்கி உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் இந்த இணையத் தளம் சிறப்பாக இயங்கிவருகிறது. அரசிடமோ அல்லது எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமோ நிதி உதவி பெறாமல் முற்றிலும் தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து இத்தளத்தை நடத்திவருவது பாராட்டுக்குரியதும், பலருக்கும் வழிகாட்டுவதுமாகும்

 


 

நூல்: கானா யீனாவின் கணினி

ஆசிரியர் : ம.மு.கண்ணன்

கவிதையோ, கட்டுரையோ, கதையோ _ எதுவாக இருந்தாலும், அது படைக்கப்பட்ட காலத்தின் கண்ணாடியாக இருந்தால் மட்டும் போதாது. வருங்காலத்தின் நல்ல மாற்றத்திற்கான கருவியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், நூலாசிரியர் ம.மு.கண்ணன் அவர்கள், கடந்த காலத்தில் இருந்த மோசமான, ஒழுக்கமற்ற நடைமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடுமையாகச் சாடி, அவைகள் மாற்றப்பட வேண்டும். மக்களும் மாறவேண்டும் என்கின்ற தணியாத தாகத்துடன் கானா யீனாவின் கணினி _ என்ற நூலை படைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவுகின்ற காட்டுமிராண்டித் தனமான போக்குகளை சாடுவதுடன் நில்லாமல், மக்கள் மாறவேண்டியதற்கான காரணங்களையும், அதற்கான வழிகளையும் சுட்டுகிறார்.

மக்களைப் பொறுத்தவரையில், மிகப் பெரும்பாலோர் சமூகத்தை மேலோட்டமாகவே பார்க்கும் நிலை  மாறி எதையும், ஏன், எதற்கு, எப்படி–? என்று ஆழமாகப் பார்க்கும் நிலை வரவேண்டும் என்கின்ற ஆசை நூலாசிரியரிடம் மேலோங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு : 04322 – 65050, 94433 65050

 


 

 

ஆவணப்படம்

AI  BHIM COMRADE
ஜெய் பீம் தோழர்

சுமார் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய ஜெய் பீம் தோழர் -_ ஆவணப் படத்தை, இந்தியாவில் புகழ்பெற்றவரும், ஆவணப் பட இயக்குநர்களில் குறிப்பிடத்தக் கவருமான ஆனந்த் பட்வர்த்தன் இயக்கியுள்ளார். நர்மதா அணைக் கட்டு பிரச்சினை, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, பெண்ணியம் பற்றியும் இவர் இயக்கிய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கன.

இவர், மதவாதத்திற்கெதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவா கவும் தன்னுடைய ஆவணப்படங் களை ஆயுதப் படங்களாக மாற்றி வருபவர். ஜெய் பீம் தோழர் _ ஆவணப்படம் முழுமை பெறுவ தற்கு பதினான்கு ஆண்டுகள் பிடித்துள்ளன.

இந்துத்துவ சக்திகளோடு தலித் இயக்கங்கள் அரசியல் கூட்டணி வைக்கும் ஆபத்தான போக்கை இந்த ஆவணப் படம் கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. இந்துத்துவா இயக்கமும் தலித் இயக்கங் களும் பார்ப்பன சக்திகளும் கைகோர்க்கும் இடம் ஆபத்தான விபத்து நடக்கும் இடம் என்பதனை Directorial touch  என்று சொல்லும் வகையில் ஒரு குறியீடு மூலம் விளக்கி இருப்பது இந்த ஆவணப்படத்தின் மய்யக் கருத்தாகவே கொள்ளலாம்.

ஜெம் பீம் தோழர் ஆவணப் படத்தின் உரையாடல்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.150. இதைப் பெற விரும்பும் தோழர்கள் +919819882244 என்ற எண்ணுக்கும் anandpat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கூடுதல் தகவல்களுக்கு www.patwardhan.com என்ற இணையதளத்திற்கும் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 

– உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *