தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று மதமறுப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைத் தகர்ப்பு, தன்மான உணர்வு ஊட்டல் போன்றவற்றை முனைப்போடு செய்தவர். ‘இராவண காவியம்’ தீட்டி ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத் தகர்த்தெறிந்து, இராமாயணத்தையும் இராமனையும் தோலுரித்து, தமிழர் பெருமைகளை நிலைநாட்டியவர். திருக்குறளுக்கு தனிச் சிறப்புமிக்க உரையும் எழுதிய பெருமைக்குரியவர்.
