Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தொல்லியல் அறிஞர் சர் ஜான் மார்ஷலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!

மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.
சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர்ஜான் மார்ஷல் அவர்களின் முழுவுருவச் சிலையினைத் தமிழ்நாட்டில் நிறுவியும் கொண்டாடப்படும் என எனது அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.