– உடுமலை நாராயண கவி
- உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார
ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்
முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார்
- கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு! – இது
களைப்பபை நீக்கிக் கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!
- உலகம் வாழ வானம் மழை
பொழிந்திட வேண்டும் – வானம்
பொழிந்திட நாம் வனமரங்கள்
வளர்த்திட வேண்டும்.
- தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
காசுமுன் செல்லாதடி.
- துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு! – இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்
துலங்கிடும் தனிச் செழிப்பு!
- அறிவேதரும் பெருமை சிறுமை!
அவரவர்பால் அமைந்த திறமை!
உறவுடன் யாவரும் வேற்றுமை
நீக்கிட முயல்வது கடமை!
- ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே – குதம்பாய்
காசுக்குப் பின்னாலே
- ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம்
வேலை செஞ்சேயாகணும் – இனி
அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை – அக
ராதிவிட்டே எடுக்கணும்.
- நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது
அந்தக் காலம்; – எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது
இந்தக் காலம்
- 10. மழைவரு மென்றே மந்திரம் ஜெபிப்பது
அந்தக் காலம்; – மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது
இந்தக் காலம்!
- வரவு செலவு எண்ணிப் பார்க்கணும் – வீட்டு
வாழ்வின் தேவைக்கண்டு கேக்கணும் – போலி
மரியாதை மதிப்புக் காக
அல் டாப்புகளை நீக்கணும்!
- ஓடி யோடிப் பல வேலைகள் செய்பவன்
உடம்பது திடமாகும் – செய்யாவிடில்
உறுப்புகள் முடமாகும் – அல்லாமலும்
உற்சாகம் குறைவாகும்!
- பிறவியிலே குலபேதமும் ஏது?
பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது!
அறநெறி யதற்கிது அணுவுந் தகாது;
அரி ஹரி யென் திருச்செவி கேளாது.
- மழை கொறஞ்சா விளைவுயராது – நம்ம நாட்டில் ஜாதி
மதமிருந்தாப் பகமை மாறாது;
எதையும் சுத்தப் படுத்தணும்!
- அன்பே கடவுள் என்ப தெதனாலே? – அதில்
ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே!
சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே?- ஏமாத்துகிற
வார்த்தையு மிருப்பதாலே!
- ஜாதிமதம் இல்லையென்ப தெதனாலே? – மனம்
சமத்துவம் தானடைந்த தன்மையாலே!
பொதுவுடைமை கேட்ப தெதனாலே? – தொழில்
புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே!
- ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து
ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் – இவர் அதை
ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்
உண்ணாமலே செலவழிப்பார்!
பட்டம் பதவிக் கிறைப்பார் – கோயில்
கட்டுவதற்கும் செலவழிப்பார்