சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் அப்பா நேரடியாக எனக்கு கத்துக் கொடுக்கலைன் னாலும், நடைமுறையில அவரோட சில கொள்கைகள் எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு.
பெரியவங்களை மதிக்கணும். பணிவா இருக்கணும்… ஆனா, உனக்கு சரியாக புரியாதவரைக்கும் ஏன்? எதுக்கு? எப்படி?ன்னு கேள்வி கேக்கத் தயங்கக்கூடாதுன்னு அப்பா சொல்லுவார். அந்த ஆலோசனையும் அறிவுரைகளும் என்னை செதுக்கி இருக்கு.
ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது ஒருநாள் முடி வெட்டிக்கறதுக்காக பியூட்டி பார்லர் கிளம்பினேன். வீட்ல வேலை செய்யிறவங்க, இன்னைக்கு செவ்வாய் கிழமை… முடி வெட்டக் கூடாதுன்னு சொன்னாங்க. சரின்னு நானும் வீட்லயே இருந்துட்டேன். அப்பா வந்து, ஏன் முடி வெட்டப் போகலை?ன்னு கேட்டார்.
செவ்வாய்க்கிழமை வெட்டக் கூடாதாம்!னு சொன்னேன். எதுக்காக வெட்டக் கூடாதுன்னு அவங்ககிட்ட கேள்வி கேட்டியா?ன்னார். அப்போதான் எனக்கு சுரீர்னு உரைச்சுது. அன்னைக்குத் தொடங்கிய என்னோட கேள்விகளை இப்பவும் கேட்டுக் கிட்டிருக்கேன். ஜாதி, மதம், கடவுள்னு எதுலயும் எனக்கு நம்பிக்கை ஏற்படலை…
– திவ்யா (நடிகர் சத்யராஜின் மகள்)
நன்றி : குங்குமம்