தமிழகம் கடந்து இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் உணரப்பட்ட பெரியாரின் தொண்டு இப்போது ஆப்பிரிக்காவிலும் உணரப்படத் தொடங்கிவிட்டது. ஆப்பிரிகாவின் கானா நாட்டு கிராமப்புற சமூக மக்களின் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதற்கு உதவி செய்ய, பெரியார் – ஆப்பிரிக்க நிறுவனம் என்ற பெயர் கொண்ட ஓர் இந்திய அமைப்பு அக்காராவில் 2012 செப்டம்பர் 15 அன்று பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் (PAF) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான கானா நாட்டின் முன்னாள் தூதர் பென்டர்ன் வில்லியம்ஸ்,“கானா நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூக மக்களிடையே நிலவும் வறுமைக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப விவசாயிகளுக்கு, நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது, கிராமப்புற சமூகத்திற்கு அதிக அதிகாரங்கள் அளிப்பது என்ற நோக்கத்தைக் கொண்டது இந்த அமைப்பு எனப் பாராட்டிப் பேசினார்.
ஜாதி நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என்னும் அடையாளமே இல்லாதபடி சமூகத்தை மாற்றி அமைக்கவும் சோர்விலாமல் பாடுபட்ட, நீதிக் கட்சியின் முன் னாள் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகளை, பணிகளைப் பற்றி பரப்புரை செய்வதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
லிபேரியா நாட்டு தூதர் கிளவண்டா பிரைட் பார்க்கர் பேசும்போது, “அனைத்துலக மனித உரிமை மாநாட்டின் அடித்தளமாக விளங்கும் மனித உரிமைகளை நிலை நாட்டும் பணிக்கு தந்தை பெரியார் அவர்களின் முயற்சிகள் வழிகோலின. பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்று அய்க்கிய நாடுகள் மற்றும் அதன் அமைப்புகள் பின்பற்றுவதற் கான ஓர் அடிப்படை ஆவணமாக விளங்கும் மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன, என குறிப்பிட்டார்.
பின்னர் உரையாற்றிய பெரியார் ஆப்பிரிக்க அமைப்பின் செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார்,“கிராமப்புற சமூக விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ள அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தீர்வு காண ஆக்கபூர்வமான, நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
கானா நாடு இந்தியாவுக்கு ஒரு நல்ல நட்பு நாடாக விளங்குகிறது. கானாவின் கிராமப் புற சமூகங்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான உதவிகளை அவர்களது வீட்டு வாசல் களுக்கே கொண்டு சென்று அளிப்பது எங்களது பொறுப்பாகும் ,என்று அவர் கூறினார்.
தனது எழுத்துகள், பேச்சுகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய தந்தை பெரியார், சுதந்திரமாக சிந்தித்து, பகுத் தறிவு சிந்தனை, அனுபவம் மற்றும் சமூக நலன் ஆகி யவற்றை சீ தூக் கிப்பார்த்து எது ஒன்றையும் மதிப் பிட வேண்டும் என்று அவர் களுக்கு அறி வுறுத்தினார்.
புத்துலகின் தீர்க்கதரிசி அவர் என்று யுனெஸ்கோ நிறு வனம் மிகவும் பொருத்தமாக வும், சரியாகவும் விவரித்துள்ளது. தனது செல்வம் பொதுமக்கள் வழங்கிய நன் கொடைகள் ஆகிய அனைத்தையும் ஒரு பொது அறக் கட்டளை நிறுவி மனித குல நலனுக்காகவே ஈந்தவர் தந்தை பெரியார் அவர்கள் என்றும் குறிப்பிட்டார். தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்தியை காணொளி மூலம் தரப்பட்டது.