Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விடை நோக்கும் வினா

எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவரைப் பேட்டி கண்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை நிருபர்,
“இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத்
தூண்டிய ஆண்ட
வரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன்கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், அந்த மீனுக்குக் கடவுள் காட்டிய கருணை என்ன?
நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்…?”
என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
தொடர்ந்து அவரே சொன்னார்…
“கடவுள் என்று தனியே ஒன்றும் இல்லை. எல்லாம் இயற்கைதான். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது…!” என்றார் எடிசன்.
(தகவல் : ‘வாசல்’ எழிலன்)