1. கே: ‘‘திராவிட மாடல் அரசின் முன்னோடி இராமன்’’ என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூற்று அறியாமையா? இராம பக்தியின் வெளிப்பாடா? இப்படிப்பட்டவர்களுக்குப் பயிற்சி முகாம் கட்டாயம்தானே?
– மு.தணிகாசலம், கொடுங்கையூர்.
ப: ‘விடுதலை’ 23.7.2024 அன்று இதழில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
அவர்களது அறிக்கை – காண்க.
2. கே: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராவதற்குத் தடையில்லை என்றால் அதன் வினை படுமோசமாகாதா? இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?
– கவிதா மனோகரன், அயனாவரம்.
ப: மக்கள் இயக்கத்தை நடத்தி, அந்த ஆட்சியின் யதேச்சாதிகார பாசிசத்தை ஒழிக்க, தொடர் முயற்சிகளில் அலுப்பு, சலிப்பின்றி ஒத்தக் கருத்துடையோர் ஒருங்கிணைந்து நின்று தீர்வு காண வேண்டும்.
3. கே: அம்பேத்கரை மட்டும் ஏற்றுக்கொண்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் புறக்கணிக்கும் தலித்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– எம்.ராஜா, புதுக்கோட்டை.
ப: பரிதாபத்திற்குரிய, பக்குவப்படாத- அல்லது ஒரு சில அரசியல்
வாதிகளின் கைப்பாவையாகிவிட்ட- திருத்தப்பட வேண்டிய நம் சகோதரர்கள் என்றே பார்க்கிறோம்!
4. கே: ‘நீட்’ தேர்வு கூடாது; அது ரத்து செய்யப்படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை, காரணங்களை முழுமை
யாகத் தொகுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், ரத்து செய்ய வாய்ப்பு கிடைக்குமா?
– பா.ருக்மணி, காஞ்சிபுரம்.
ப: காளை மாடு கன்று போடாது!
5. கே: மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்
களை நிரந்தரமாகச் செய்ய அமைப்புகளை உருவாக்கி, அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து
வீர்களா?
– கே.சரஸ்வதி, கும்பகோணம்.
ப: வரும் ஆகஸ்ட் மாதம் உங்களது ஆலோசனையின் முதற்கட்டம் செயல் வடிவம் பெறும்!
6. கே: கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற நீதிமன்ற அறிவுரை பற்றி தங்கள் கருத்து என்ன?
– வே.பலராமன், அரக்கோணம்.
ப: சிந்திக்க வேண்டிய ஆக்கப்பூர்வக் கருத்தேயாகும்.
7. கே: தாஜா செய்து தன் வயப்படுத்தும் மோடி முயற்சிக்கு நிதீஷ்குமாரும் சந்திரபாபுவும் உடன்பட்டால், பா.ஜ.க. ஆட்சி பழைய பாதையிலே செல்லும் ஆபத்து வர வாய்ப்பு உண்டு என்பதால், இதைத் தடுக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் என்ன செய்யவேண்டும்?
– ஆர்.வெங்கட், திருச்சிராப்பள்ளி.
ப: ஜனநாயகரீதியில் அனைவரையும் ஒருங்கிணைத்து மக்களிடையே தொடர் விழிப்புணர்வுக்கான தொடர் போராட்டங்கள், பரப்புரைகளை நாடு தழுவிய அளவில் செய்து கொண்டே இருக்கவேண்டும். ஹிட்லர்கள், வரலாற்றில் நிலைத்ததில்லை!
8. கே: ‘நீட்’ தேர்வை ரத்து செய், திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெறு என்று சந்திரபாபுவும், நிதீஷ்குமாரும் வலியுறுத்தாதது ஏன்? நிபந்தனை விதிக்காதது ஏன்? இவற்றை அவர்கள் ஏற்கிறார்களா?
– இரா.வேணி, கடலூர்.
ப: நிர்மலா சீத்தராமன், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி அறிவித்த அறிவிப்புகளே உங்கள் கேள்விக்கான பதில்.
9. கே: ஒன்றிய அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தீர்வு பெற்றால் என்ன?
– குண.விஜய், கோயம்புத்தூர்.
ப: மக்கள் மன்றத்தில் தொடர் போராட்டங்கள்; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளையும், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதையும் விளக்கி, மாநிலம் தழுவிய பரப்புரைகள், எதிர்ப்புகள் பல கட்டங்களில் தேவை.