பெருசா உயர்தர சுத்த சைவம்,அஹிம்சாவழிக்கொள்கை என்றெல்லாம் பீற்றிக்கொள்பவர்களே! மன்சாட்சியைத்தொட்டு சொல்லுங்கள், நீங்கள் சாப்பிடும் தேன் எப்படி வந்தது? நூற்றுக்கணக்கான தேனிக்களின் மரணத்தில்தான் இந்த தேன் என்பது நிசமாகவே உங்களுக்கு தெரியாதா? தேன் சைவமா? அசைவமா?
Rajesh Deena
ரெண்டு மூணாச்சு. மூணு நாலாச்சு. நாலு எட்டாச்சு. தக்காளி எட்டு இப்ப பண்ணிரண்டு ஆயிருக்கு! இதுமாதிரியான சமயங்களில் தான் ஜனநாயகம் என்ற கேடுகெட்ட ஆட்சிமுறையில் மேல் எரிச்சல் வருது! ஓட்டுப் போட்டவனுக்கும் 12மணி நேரம், போடாதவனுக்கும் 12மணி நேரம்!
Don Ashok
ட்விட்டருக்கும், ஃபேஸ்புக்கும் இந்திய அரசு தடைவிதிக்கலாம் என்று வதந்தி உலவுகிறது. அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமேயானால் நமது போராளிகள் முன்னெடுக்கும் புரட்சி என்ன கதி ஆகுமென்ற சோகம் ஏற்படுகிறது :-
போராளிகள் பல பேரின் வயித்துப் பாட்டில் மண்ணள்ளித் தூற்ற நினைக்கும் இந்த இந்திய அரசு கை வைக்கும் கள்ளத்தனத்தை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன்! – Yuva Krishna
சமூக நீதிக் கொள்கையை இந்திய அளவில் கொண்டு சென்றது திராவிட இயக்கத்தின் வெற்றி. எனினும், தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையினால் பல்கிப் பெருகியுள்ள பன்னாட்டு- தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால்தான் சமூக நீதி என்பதற்கு குறைந்தபட்ச அர்த்தமாவது இருக்கும். தொழிலாளர் உரிமைகளையே மறுக்கும் இந்த நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கானப் போராட்டங்களை முனைப்போடு முன்னெடுக்கப்போவது யார்?
– Govi Lenin
நாட்டுக்கு பாரமாக இருக்கும் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் : அத்வானி
#அடங்கொக்க மக்க.. இதை சொல்லுது பாரு ஒரு பெரிய பாரம் :-)))))
Surya Born To Win
உண்மையான வீரர்கள் தற்கொலை செய்வதில்லை… தற்கொலை என்பது போராட்டமல்ல…
எதிர்கொள்ள துணிந்தவன் தற்கொலை செய்ய மாட்டான்…
துணிச்சல் இல்லாதான் போராட மாட்டான்…
இது முத்துக்குமாருக்கும் பொருந்தும்…
செங்கொடிக்கும் பொருந்தும்…
ஹைதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் தீக்குளித்த ஒன்பது மாணவர்களுக்கும் பொருந்தும்…
ஒருவேளை நான் செத்தால் எனக்கும் பொருந்தும்…
Siddhan Cbe
“இனப்பெருக்க உரிமை என்பது பெண்களுடைய உரிமைகளில் மிக முக்கிய உரிமையாகும். நமது வாழ்வில் நமக்கு நெருக்கமான இந்த சங்கதியில் நமக்கு உரிமை இல்லாவிட்டால், வேறு எதிலும் நாம் உரிமை பெறுதல் இயலாது. இதனைப் பெறுவது, ஒரு சலுகையாகவோ, லாபமாகவோ கருதுதல் கூடாது. அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகவே கருதவேண்டும்.” – Ilangovan Balakrishnan
“Reproductive freedom is critical to a whole range of issues. If we can’t take charge of this most personal aspect of our lives, we can’t take care of anything. It should not be seen as a privilege or as a benefit, but a fundamental human right.”
– Faye Wattleton
ஒரு புனித நூலில் சொல்லியிருக்கு,உலகத்தை படைத்த இறைவன் அந்த பூமி பறந்து போகாம இருக்க,அதில் ஆப்பு அடித்து மலைகளை பொருத்தியிருக்கிறான் என்று.
என் சந்தேகம் என்னன்னா, இந்த கிரானைட், புளுமெட்டல் தேவைகளுக்காக மலையை உடைத்து எடுக்கிறாங்களே, வெயிட் இல்லாம பூமி பறந்து போயிடுமா?
– Rajesh Deena
“எங்களிடம் பிரமோஸ் இருக்கிறது
எங்களிடம் ப்ரித்வி இருக்கிறது
எங்களிடம் நிற்பாய் இருக்கிறது
எங்களிடம் அக்னி இருக்கிறது
என்று சொல்கிறீர்களே …??
இதெல்லாம் இருக்கும் உங்களிடம்
சூடு சொரணை
என்று எதாவது இருக்கிறதா ???
உன் நாட்டு மீனவனை காக்க
தெரியாத உங்களுக்கு இத்தனை ஆயுதங்கள் எதற்கு ??”
– தமிழால் இணைவோம்