ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 01-15

கேள்வி : ஒவ்வொரு மதங்களுக்கும் தனித்தனி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்று பெருகி வருவது ஆன்மீகத்தின் வளர்ச்சி யையும், வெற்றியையும், நாத்திகத்தின் தோல்வியையும்தானே காட்டுகிறது? _ பெ.பெரியசாமி சின்னமனூர்

பதில் : மதங்கள் நம்பிக்கையைவிட்டு, விஞ்ஞான தொழில்நுட்பத்தைத்தேடி, பரப்பி காப்பாற்ற முன்வந்துள்ளனவே, அதுவே நாத்திகத்தின் வெற்றி – மதங்களின் மண்டியிடல் தோல்வி அல்லவா? ஆழ்ந்து சிந்தியுங்கள். பிறகு புரியும்.

கேள்வி : ஹஜ் யாத்திரை, ஜெருசலம் பயணம், மான சரோவர் புனித யாத்திரை ஆகியவற்றுக்கு நிதி உதவி தரும் தமிழக அரசு பகுத்தறி வாளர்களுக்கு அறிவியல் பயணம்  செய்ய நிதி உதவி தருமா? — – முருகன் ஆவடி

பதில் : பகுத்தறிவாளர்கள் அப்படி ஒரு உதவியை எதிர்பார்ப்பவர்கள் அல்ல. விஞ்ஞானிகள் பிறந்த, சிறந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கும் உதவி என்று வழக்குப் போட்டு உரிமையை நிலைநாட்டலாம்.

கேள்வி : மத்தியில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க. குடியரசு தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்தத் தயங்கியதேன்? – ஜி.நளினி, பெரம்பலூர்

பதில் : அதன் உயரம் – சக்தி அதற்குத் தெரிந்துள்ளது; பிரதமரே அடுத்து பா.ஜ.க.விலிருந்து இல்லை என்ற அத்வானிகள் கூற்று எதைக் காட்டுகிறது?

கேள்வி : பொதுவாகவே மக்களுக்கு பொதுப் பிரச்ச னையில் அக்கறை இல்லையே என்ன காரணம்? _ அழகிரிதாசன், கல்மடுகு

பதில் : தொலைக்காட்சி, பெரிய திரை, இளைஞர் களை கிரிக்கெட், கைத் தொலைபேசி போதைகள் திசை திருப்பிவிட்டுள்ளன.

கேள்வி : இந்தியாவை மீட்கும் சக்தியாக ஜெயலலிதா இருக்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளாரே? – பி.செல்வம், பெரம்பலூர்

பதில் : அப்படியாவது அவர் ஆசைப்படுவது இவருக்குக் கிட்டினால் நலம் என்று சிலர் கூறுகிறார்கள். யாமறியோம்!

கேள்வி : பத்மநாபசாமி கோவில் சொத்துக்கள் ஒன்று போதுமே. இந்தியாவின் நதிநீர்களை இணைப்பதற்கு. ஆரம்ப வேலையைத் துவக்கலாமே? – ச.நா.சாமிசம்மாரன், வேலூர்

பதில் : துணிவு வேண்டுமே – ஆட்சியாளருக்கு!

கேள்வி : அடுத்த போர் தண்ணீருக்காகத்தான். போர் ஏற்படப் போகிறது என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்களே? _ த. வெற்றிகொண்டான், காஞ்சி

பதில் : 100க்கு 100 உண்மை; இதை சென்ற 2 ஆண்டு களுக்கு முன்பே லண்டன் வார ஏடான, ‘தி எக்கானமிஸ்ட் ‘(The Economist’ ‘) ஏடு எழுதியுள்ளதே!

கேள்வி : சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் மாற்றுப்பாதை சாத்தியமில்லை என ஆர்.கே. பச்சவுரி குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது ஓரளவு முன்னேற்றம் என கூறலாமா? – அய்யாமணி, செங்கை

பதில் : நிச்சயமாக. இனி பந்து மத்திய அரசிடம்தான்; விரைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை முடித்து, பணி முடிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். செய்தால் அது 2014 தேர்தலுக்கு தமிழ்நாட்டில் மத்தியில் ஆளும் கூட் டணிக்குக் கைகொடுக்குமே!

கேள்வி : வள்ளலார் கோட்பாடுகளை நாம் எந்த அளவுக்கு ஏற்கவேண்டும்? வள்ளலார் முன்னதாக தமது கவிதைகளில் எழுதி யிருந்தபடி தமது உடலை ஒளியுடல் ஆக்கிக்கொண்டாரா? – க.அன்பழகன், திருவொற்றியூர்

பதில் : ஆறாம் திருமுறை வள்ளலார், ஓதி உணர்ந்து மாறிய வள்ளலார். அதில் பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ஏற்க வேண்டியது ஏராளம் உள்ளனவே!

கேள்வி : இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் அடிக்கடி அழிவுக்குள்ளா கிறார்களே! இந்திய அரசுக்கு சுரணை இல்லையா? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : சூடு, சொரணை இல்லை என்று கூறுவதற்கு நமக்கே கூச்சமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *