பெரியாரை அறிவோமா?

செப்டம்பர் 01-15

1)    பெரியார் அவர்களால் `குடி அரசு ஏடு தொடங்கப்பெற்ற ஆண்டு

அ) 1926 ஆ) 1925 இ) 1935    ஈ) 1928

2)    “உண்மையை அஞ்சாது உரைக்கும் உரமுடைய நெஞ்சச் செவ்வி மிகப் படைத்தவர் பெரியார் என்பது எல்லாரும் ஒப்பமுடிந்த உண்மை என்று புகழ்ந்து எழுதியவர்

அ) கா.சுப்ரமணியபிள்ளை
ஆ) அவ்வை துரைசாமிபிள்ளை
இ) டி.கே.சிதம்பரநாத முதலியார்
ஈ) நாவலர் சோமசுந்தர பாரதியார்

3)    கடவுள், மதம், ஆத்மா முதலிய தலைப்புகளை உள்ளடக்கிய பெரியாரின் தத்துவ விளக்க நூல் எது?

அ) ஆத்ம விசாரணை   
ஆ) ஆத்மவாதம்
இ) மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதி வாதம்
ஈ)  கடவுள் புரட்டு

4)    “பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் என்னும் நூலின் ஆசிரியர்

அ) புலவர் மா.நன்னன்   
ஆ) புலவர் ந.இராமநாதன்
இ) பேராசிரியர் இறையன்   
ஈ) புலவர் தங்கப் பிரகாசம்

5)    “பெரியார் போலவே அலுப்போ சலிப்போ இல்லாமல் பெரியாருடைய ஆதாரக் கொள்கைகளைச் சுருதி பேதமோ, தாள பேதமோ இல்லாமல், பிசிறு தட்டாமல் இன்று வரையில் பிரச்சாரம் செய்து வருகிறார் வீரமணி எனச் சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஒரு இதழ் எழுதியுள்ளது. அந்த இதழின் பெயர்

அ) பொன்னி          ஆ) சிங்கை முரசு
இ) சிங்கப்பூர் தூதுவன்  ஈ) தமிழ் முரசு

6)    தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத் தத்துவத்தை விளக்கித் தமிழர் தலைவர் கி.வீரமணி 1997-இல் வெளியிட்ட நூல்

அ) தமிழர் திருமணம்   
ஆ) திராவிடர் திருமணம்   
இ) சுயமரியாதைத் திருமணம் ஏன்?   
ஈ) சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்

7)    “தலைகீழாக இருந்த சமுதாயத்தை நேராக நிற்கச் செய்தவர் பெரியார் எனப் பாராட்டி எழுதியவர்

அ) ஜி.டி.நாயுடு        ஆ) கே.வி.ரெட்டி நாயுடு    இ) எஸ்.முத்தையா முதலியார்    ஈ)ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன்

8)    “மதமும் கடவுளும் மக்களுக்குத் தொண்டு செய்யவா? மக்கள் மதத்திற்கும் கடவுளுக்கும் தொண்டு செய்யவா? என்பதே பெரியாரின் கேள்வி என எழுதியவர்

அ) மறைமலை அடிகளார்    ஆ) திரு.வி.க.
இ) அறிஞர் அண்ணா ஈ) குன்றக்குடி அடிகளார்

9)    “பெரியார் புதிய காலத்தின் தொலை நோக்காளர்;தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமுக சீர்திருத்தத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், அடிப்படையற்ற நடைமுறைகள் ஆகியவற்றின் கடும் எதிரி எனப் பாராட்டி 1970 இல் விருது வழங்கிய நிறுவனம்

அ) சென்னைப் பல்கலைக் கழகம்
ஆ) யுனெஸ்கோ நிறுவனம்
இ) லெனின் கிராடு பல்கலைக் கழகம்
ஈ) சிகாகோ பல்கலைக் கழகம்

10)    “வான் தவழும் வெண் மேகத் தாடி ஆடும்; வளமான சிந்தனைக்கோர் ஆட்டம் இல்லை“ எனப் பெரியாரைப் புகழ்ந்து பாடியுள்ள கவிஞர்

அ) நாரா.நாச்சியப்பன்    ஆ) கவிஞர் முடியரசன்
இ) கவிஞர் வாணிதாசன்    ஈ) கவிஞர் கண்ணதாசன்

 

ஆகஸ்ட் 1-6_31 இதழில் வெளியான பெரியாரை அறிவோமா கேள்விகளுக்கான விடைகள்

1–_ஈ, 2_அ, 3_ஈ, 4_அ, 5_அ, 6_அ, 7_இ, 8_ஈ, 9_இ, 10_ஈ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *