தளர்ந்துவரும் மத நம்பிக்கை
அனைத்துலக வின்காலப் நிறுவனம்
அண்மையில் 57 நாடுகளில் 50,000 மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில், மதவழிபாட்டுத் தலத்துக்கு நீங்கள் செல்கிறீர்களா – இல்லையா என்பதைக் கடந்து, நீங்கள் மதம் சார்ந்தவர்களாக அல்லது மதம் சாராதவர்களாக அல்லது நாத்திகர்களாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
2005 இல் இது போன்று எடுக்கப்பட்ட ஆய்வின்போது 69 விழுக்காடு அயர்லாந்து மக்கள் தங்களை மதம் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால் இந்த ஆய்வின்போது இந்த எண்ணிக்கை 22 புள்ளிகள் குறைந்து 47 விழுக்காடாக ஆகியுள்ளது. மேலும், 10 விழுக்காட்டு மக்கள் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
வியட்நாமில் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காட்டிலிருந்து 23 புள்ளி குறைந்து 30 விழுக்காடாக இப்போது உள்ளது.
உலக அளவில் தங்களை மதநம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 59 விழுக்காடாக மட்டுமே . 2005 இல் இருந்து தற்போது இது 9 புள்ளிகள் குறைந்துள்ளது. அத்துடன் 13 விழுக்காட்டு மக்கள் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். இது 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்குப் பின் மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
மதத்துடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 13 புள்ளி குறைந்து 60 விழுக்காடாக ஆகியுள்ளது. மேலும், 5 விழுக்காட்டு அமெரிக்கர்கள் தங்களை நாத்திகர்கள் என்று அறிவித்துள்ளனர்; 2005 இல் இருந்ததை விட இது 4 புள்ளிகள் அதிகமாகும்.
தகவல்: டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ