Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எஸ். தவமணிராசன் மறைவு : 19.05.2001

திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் தவமணிராசன் அவர்களைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒருவன் தண்ணீர் குடித்துவிட்டான் என்பதற்காக பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார். அவ்வளவுதான், பிடித்தது நெருப்பு; பற்ற வைத்தவர் தவமணிராசன், இதன்மூலம் ஓர் இயக்கம் பிறப்பெடுத்து திராவிடர் மாணவர் கழகமாக உருப்பெற்றது. இதற்கான விதையை ஊன்றியவர் தவமணி ராசன் அவர்களேயாவார்.