Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரை அறிவோமா?

1)    வைக்கம் போராட்டம்பற்றிக் காந்தி யங் இந்தியா  பத்திரிகையில் எழுதிய 48 பக்கக் கட்டுரையில் வைக்கம் வீரர் பெரியார் பெயரை எத்தனை இடத்தில் குறிப்பிட்டு எழுதினார்?

அ) ஒரு இடத்திலுமில்லை
ஆ)  ஒரே ஒரு இடத்தில்
இ) மூன்று இடங்களில்
ஈ) 17 இடங்களில்

2)    நமது நாட்டில் உயர்வு-தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கிறது.  சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.  இந்த இதழினிடத்து திரு நாயக்ககுக்கு எவ்வளவு அக்கறை உண்டோ அவ்வளவு அக்கறை எனக்கும் உண்டு என்று கூறிய சைவப் பெரியார் யார்?

அ)  ஞானியார் அடிகள்
ஆ) மறைமலை அடிகள்
இ) திரு. வி.க. ஈ) குன்றக்குடி அடிகள்

3)    என்றைக்கு,  மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு; அதுவும் அவை பிறவியில் ஏற்படுகின்றன; அந்தந்த வருணத்தாருக்கும் ஒரு தருமம் உண்டு   என்று சொன்னாரோ, அன்றே அவரிடம் மகாத்மா தன்மை இல்லை என்று தீர்மானித்து விட்டோம் … மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொறுத்துதான் வழங்கப்படுவதே தவிர வெறும் உருவத்திற்காக வழங்கப்படுவதல்ல என்று காந்தியைச் சந்தித்து வாதிட்டபின் எழுதியவர் யார்?

அ) பெரியார்   ஆ) எஸ். இராமநாதன்
இ) கைவல்யம்   ஈ) பொன்னம்பலனார்

4)    கேரளாவில் கோட்டயத்தில் ஈழவ சமுதாய சார்பாக நடத்தப்பட்டுப் பெரியார் கலந்து கொண்ட சுயமரியாதை இயக்க  மாநாடு எந்த நாள் நடைபெற்றது?

அ) 7. 5 1929        ஆ) 2. 12. 1933
இ) 17. 9 . 1931    ஈ) 1. 11. 1936

5)    தேவதாசி ஒழிப்புச்  சட்ட முன்வரைவை தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர் யார்?

அ) டாக்டர் நாயர் ஆ) டாக்டர் முத்துலெட்சுமி  இ) ஏ. பி. பாத்ரோ
ஈ) பனகல் அரசர்

6)    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாகபுத்தியும் வேண்டும்.  உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டியது இல்லை என்பதோடு, இவை உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றிபெறவும் முடியாது என்று பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?

அ) காந்தியடிகள்    ஆ) பெரியார்
இ) டி.எம். நாயர்    ஈ) சர். தியாகராயர்

7)    மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம் முதலில் எந்த இந்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது ?

அ) இந்தி        ஆ) வங்காளி
இ) தமிழ்        ஈ) மலையாளம்

8)    அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநிலத்தில் தொடங்கப்பட்டு,  மக்களால் நெடுங்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிப்படையில் ஆட்டம் காணச் செய்து விட்டது எனச் சுயமரியாதை இயக்கத்தை 1931இல்  வருணித்த வெளிநாட்டு இயக்கம் எது?

அ) இலண்டன்  ரேஷனலிஸ்ட் பிரஸ் அசோஷியேஷன்   
ஆ) பெர்லின் நாத்திக சங்கம் இ) மாஸ்கோ கம்யூனிஸ்ட் கட்சி   
ஈ) அமெரிக்க உண்மை நாடுவோர் சங்கம் 9)    தன்தோளுக்கிட்ட மாலையைத் தலைவர் பெரியாரின் தாளுக்கு இடுகிறேன் என்று கூறியவரும், திருவையாறு சமஸ்கிருதக்  கல்லூரியில் தமிழ் படிக்கவாய்ப்பு ஏற்படுத்தியவருமான திராவிடத் தளபதி யார் ?
அ) சிவகங்கை இராமச்சந்திரன் ஆ) பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன் இ) தூத்துக்குடி கே.வி. கே. சாமி ஈ)  சர். ஏ. டி. பன்னீர்செல்வம்

10)    மனிதனுக்கு மூடநம்பிக்கைகள் ஒழிந்து, அறிவுச்சுதந்திரமும் சுயமரியாதையும் ஏற்பட வேண்டுமானால் மதமும் கடவுளும் ஒழிய வேண்டும் என பெரியார் எந்த ஆண்டில் எழுதினார் ?

அ) 1925        ஆ) 1919 இ) 1928 ஈ) 1970

 

ஜூன் 1 -15 உண்மை இதழில் பெரியாரை அறிவோமா?

விடைகள்: 1.அ, 2.அ, 3.இ, 4.இ, 5.ஆ, 6.இ, 7.இ, 8.ஈ, 9.ஆ, 10.இ