ஆசிரியர் பதில்கள்

ஜூன் 16-30

  • நம்பிக்கை ஏற்பட்ட பிறகே அதிகாரப் பங்களிப்பு என்ற சரத் பொன்சேகாவின் அறிவிப்பு குறித்து? –  சா.கோவிந்தசாமி, ஆவூர்
  • யாருக்கு நம்பிக்கை? நரிக்கு ஆட்டின்மீதா? புலியின் கூட்டத்தின் நம்பிக்கை புள்ளிமான்கள் மீதா? எவ்வளவு ஏமாற்று வேலை – அவர்களை குடிமக்களாக இலங்கை சிங்களவர்கள் நினைக்கத் தயாராக இல்லை என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.
  • நரேந்திர மோடியை பிரதமராக்க எடியூரப்பா துடிப்பதேன்?
    – கலை.மோகனன், ப.குமாரபாளையம்
  • வெள்ளத்தில் போகிறவருக்கு துரும்பும் தூணாகத்தானே தெரியும்? அதைப்போல!!
  • எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட விலை உயர்வுதான் வழியா?
    – கு.கண்ணபிரான், சாயல்குடி
  • யாருக்காக வாதாடுகிறது மத்திய அரசு? முதலாளிகளுக்கா? மக்களுக்காகவா என்பதே பிரச்னை.
  • தனது சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஜெயலலிதா வீணாக்கலாமா?
    – எஸ்.பிரகாஷ்குமார், ஈக்காட்டுத்தாங்கல்
  • உரிய நேரத்தில் மக்கள் மன்றத்தில் பரிசு கிடைக்கும் இதற்கு. அதுவும் மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரின் வயிற்றெரிச்சலோடு!
  • தமிழக முழுதும் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய கோடிக்கணக்கான தொகை ஒதுக்கப்படுவது பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி எனக் கூறலாமா?   – ம.சக்திவேல், கரூர்
  • அல்வா சாப்பிட்டது போல அல்லவா அவர்களுக்கு இருக்கும்?
  • ஆ.ராசா, சிதம்பரம் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் சு.சாமி வகையறாக்கள் நாட்டையே தலைகுனிய வைக்கும் அய்.பி.எல். கிரிக்கெட் ஊழலைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?
    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
  • அதில் பங்கு கிடைக்கக் கூடும்! – யார் கண்டார்கள்? பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா?
  • தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் என்று கூறும் முதல்வர் அவர்கள் என்றாவது எதிர்க்கட்சித் தலைவர்களை கலந்து ஆலோசித்தது உண்டா? – சா.கோவேந்தன், மதுரை
  • எதிர்க்கட்சியா? அப்படி ஒன்று இருக்கிற நினைப்பே அவருக்கு இருப்பதில்லையே! சரியான பக்கவாத்தியங்கள் இருக்கின்றனவே!
  • பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்தது சரியா? – வீ.சங்கரன், நாகை
  • தவறான அணுகுமுறை. கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்ளும் வேலை!
  • ஆதீன சொத்துக்களை அபகரித்த ரௌடிகளை விரட்டியடிப்பேன் என்கிறாரே நித்தியானந்தா? மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்தியானந்தா என்ற ஒழுக்கக் கேடான சாமியார் தமிழகத்தில் இப்படி துள்ளிக் குதிக்க தமிழக அரசின் ஆதரவு காரணமா?       – தா.செல்வகுமார், ஆளூர்
  • உண்மை ஒரு நாள் வெளியாகும்! ஊருக்குப் பல விஷயங்கள் புலனாகும்!
  • பெண்கள் வெகு எளிதில் ஆன்மிக நம்பிக்கைகளால்  ஈர்க்கப்பட்டு, பல வழிகளில் ஏமாற்றப்படக் காரணம் என்ன?  – கு.தமிழ்ச்செல்வி, வேலூர்
  • எடைபோடத் தவறி, ஏமாறுவதைப்பற்றி கவலைப்படாதவர்களாக இருப்பது வேதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *