Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இங்கிலாந்தில் தகர்ந்துவரும் மத நம்பிக்கை

2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000  அளவுக்கு நாத்திகர்கள், கடவுள் பற்றிய கருத்து அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் என்ற இதழ் தெரி விக்கிறது. கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் அவை (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 37 விழுக்காடு உயர்ந்து 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்துக்களும், புத்தர்களும் 74 விழுக் காடு உயர்ந்துள்ளனர். சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்று மெயில் தெரிவிக் கிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்ற கிறித்துவ உறுப்பினர்கள் குழு ஒன்று, கிறித்துவர்களுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள இயலாத பாகுபாடு வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

நம்பிக்கையாளர்கள் மீது  மதச்சார்பற்ற எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசு அடக்கு முறையை மேற்கொள் வதாக, டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் கூறுகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 விழுக்காடு அளவு கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010 இல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன்.

அதே கால கட்டத்தில் நம்பிக்கை யற்றவர்கள் எண்ணிக்கை 49 விழுக்காடு உயர்ந்து 1.34 கோடி மக்கள் இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.