2011 டிசம்பரில் செல்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.38 கோடி. நவம்பரில் 88.43 கோடி. எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனம் மாறியோர் 2.92 கோடி என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) என்று அறிவித்துள்ளது. செல்பேசி என்பது இன்று மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத சாதனங்களுள் ஒன்றாகிவிட்டது. எந்த இடத்தில் இருந்தாலும் தொடர்பு கொண்டு செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க பெரிதும் பயன்படுகிறது. செல்பேசி பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
எனினும், நம்மில் எத்தனை பேர் செல்பேசியிலுள்ள நாள்காட்டியைப் (Calendar) பார்த்து கிழமை, தேதிகளைத் தெரிந்து கொள்கிறோம்? கணக்குகளைப் பார்ப்பதற்குப் (Calculater) பயன்படுத்துகிறோம்? எடை, அளவு ஆகியவற்றை (Converter) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுவது என்பன போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்?
மேலும், வலது காதில் செல்பேசியை வைத்துப் பேசக் கூடாது. நீண்ட நேரப் பேச்சு முக்கிய நரம்புகளைப் பாதித்து மூளையைப் பாதிக்கும் என்ற விதிமுறைகளைப் பின்பற்றுகிறோமா?
தேவையில்லாத குறுஞ்செய்திகளை அனுப்புவது மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் வசதி உள்ள செல்பேசிகளில் கண்ட கண்ட படங்களை எடுத்து ரசிப்பது, நண்பர்களுக்கு அனுப்புவது என்று தீமைக்கே பெரும்பாலோர் பயன்படுத்துகின்றனர்.