செய்திக்கூடை

பிப்ரவரி 01-15
  • முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக மத்திய நீர்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நுழைவுத் தேர்வோ நேர்முகத் தேர்வோ நடத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி உத்தரவிட்டுள்ளார்.
  • மனிதனின் தோலில் ஏற்படும் புற்றுநோயைக் குணப்படுத்தும் கிரீம் போன்ற புதிய மருந்தினை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • தென் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள தமிழ் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக பூமணி (நாயுடு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபுசலீம் மீது புதிதாக குற்ற வழக்குகளைப் பதிவு செய்து வெளிநாட்டுக் குற்றவாளியை ஒப்படைக்கும் சர்வதேச சட்டத்தை இந்தியாவின் சி.பி.அய். மீறிவிட்டதாக போர்ச்சுகல் நாட்டின் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ் வில்லா நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை www.chennaicorporation.gov.in என்னும் இணைய தள முகவரி யிலிருந்து இலவச மாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.
  • காவலர்களால் இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப் பட்ட வழக்கில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. தனித்தனியாக பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • மியான்மரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *